முன்னாள் ஹீரோயின் வசிக்கும் குடியிருப்பில் தீ.. ஜன்னலை உடைத்து மீட்ட வீரர்கள்.. நடிகர் தகவல்!
மும்பை: பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
Recommended Video
பாரதிராஜாவால் புதிய வார்ப்புகள் படம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி.
தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், முரட்டுக்காளை உள்பட பல படங்களில் நடித்தார்.

ஏக் துஜே கேலியே
ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்த ரதி, இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். இந்தியில் இவர் நடித்த 'ஏக் துஜே கே லியே' சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மற்றும் அமிதாப் பச்சலின் கூலி, அனில் கபூரின் ஆப் கே சாத், தர்மேந்திராவின் ஹுகுமத் உள்பட பல படங்களில் நடித்தார். 1985 ஆம் ஆண்டு தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து கொண்டார்.

அடுக்குமாடி குடியிருப்பு
இவர்களுக்கு தனுஜ் விர்வானி என்ற மகன் இருக்கிறார். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ரதியும் அவர் கணவரும் கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்துவிட்டனர். நடிகை ரதியும் அவர் மகனும் ஒர்லி பகுதியில் உள்ள 15 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அந்தக் குடியிருப்பில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

நடிகை ரதியின் வீடு
தகவல் அறிந்துவந்த தீயணைப்பு துறையினரால் 8 வது மாடி வரை மட்டுமே செல்ல முடிந்தது. அங்கு நடிகை ரதியின் வீட்டில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து, வீரர்கள் உள்ளே நுழைந்தனர். மெயின் கதவை உடைத்து சென்று 10 வது மாடியில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த போது நடிகை ரதியும் அவர் மகனும் வீட்டில் இல்லை.

யாருக்கும் காயமில்லை
நடிகை ரதி, போலந்து நாட்டில் இருக்கிறார். அவர் மகன் தனுஜ் பண்ணை வீட்டில் இருந்துள்ளார். இதுபற்றி நடிகர் தனுஜ் கூறும்போது, நான் லோனாவாலாவில் உள்ள பண்ணை வீட்டில் இருக்கிறேன். தீவிபத்தில் யாருக்கும் காயமில்லை. பக்கத்து வீட்டில் உள்ளவர்களை காப்பாற்ற எங்கள் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்துள்ளனர். பிறகு குடியிருப்பில் இருந்த அனைவருமே வெளியேற்றப்பட்டனர். மற்றபடி ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











