Rachitha: அது என்ன ஆண், பெண்… எல்லாரும் பண்ணுங்க.. ஃபயர் ரச்சித்தாவின் அட்டகாசமான பேட்டி!

சென்னை: சோசியல் மீடியால இப்ப அதிகம் பேசப்படும் நடிகையாக இருப்பது நம்ம ரச்சிதா மகாலட்சுமி தான். ஒரே பாட்டு மூலம் உலக பேமஸ் ஆன நடிகையாக மாறி இருக்கிறாங்க ரச்சிதா மகாலட்சுமி. ஃபயர் படத்துல கவர்ச்சியா நடித்ததற்கு, பல நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வந்தாலும், சிலர் இவருக்கு ஆதரவு தெரிவித்து தான் வராங்க.

தற்போது ரச்சிதா மஹாலஷ்மி வாவ் தமிழக youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பல விஷயங்கள் குறித்து அழகா பேசி இருக்கிறார். அதில், நடிகையாய் இருப்பதால கொஞ்சம் ஹேர், உடம்புல கவனமாக இருக்க வேண்டியது இருக்கு. அதுக்காக நான் எப்பவுமே ஆயில் உணவை தவிர்த்து விடுவேன். அதனால காலையில எழுந்ததுமே சத்துமாவு கஞ்சி குடித்துவிடுவேன். அதுவும், அம்மா வீட்டில் தயாரித்துதான். அதன் பிறகு 11 மணியளவில் ஒரு இளநீர் குடித்து விடுவேன். தினமும் அதை கண்டிப்பாக குடித்துவிடுவேன். அதன் பிறகு ஒரு மணி அளவில் மதிய உணவு சாப்பிடுவேன், அந்த உணவில் பெரும்பாலும், காய்கறி, கீரை, கூட்டு, பொரியல், தயிர் தான் இருக்கும்.

Rachitha Mahalakshmi fire interview

நடிகை ரச்சித்தா மகாலட்சுமி: அதன் பிறகு நான்கு மணி அளவில் வெஜிடபிள் சாலட் இல்லனா ஃப்ரூட் சாலட் ஏதாவது ஒன்னு எடுத்துக்கொள்வேன். இரவு உணவை ஏழு மணிக்குள்ள சாப்பிட்டுவிடுவேன் அதுக்கப்புறம் வேற எதையுமே சாப்பிடமாட்டேன். எனக்கு நான்வெஜ் அவ்வளவா பிடிக்காது. எப்போதாவது சிக்கன கொஞ்சம் விரும்பி சாப்பிடுவேன். பிரியாணி பிடிக்கும் என்னைக்காவது சாப்பிடவேண்டும் என்று நினைத்தால், அதை சாப்பிடுவேன்,பிரியாணியை விட எனக்கு ஸ்வீட்ஸ் ரொம்ப பிடிக்கும் என்றார்.

Rachitha Mahalakshmi fire interview

ஆண் என்ன.. பெண் என்ன: இதைத்தொடர்ந்து ஸ்கின் பராமரிப்பு குறித்து டிப்ஸ் கொடுத்த அவர், எனக்கு சினிமாவிற்கு வருவதற்கு முன் முகம் முழுக்க பருக்கலாக இருக்கும். பல முயற்சி செய்தேன் ஆனால், அது போகவே இல்ல அப்போது தான், ஒரு மருத்துவர் உணவு சாப்பிடும் முறையையும், தூங்கும் நேரத்தையும் மாற்ற சொன்னார் அதன் பிறகு தான் உணவு முறையை மாற்றினேன், அடுத்த சில மாதங்களிலேயே முகத்தில் பருக்கள் குறைந்துவிட்டது என்றார். அப்போது செய்தியாளர், அதை ஆண்களும் செய்யலாமா என்று கேட்க, அது என்ன ஆண்கள், பெண்கள், இதை யார் வேண்டுமானாலும் பண்ணலாம் என்று பதில் அளித்தார்.

Rachitha Mahalakshmi fire interview

சூப்பர் டிப்ஸ்: பின் கூந்தல் பராமரிப்பு குறித்து பேசிய அவர், கறிவேப்பிலை,செம்பருத்தி பூ, நெல்லிக்காய் இதையெல்லாம் தேங்காய் எண்ணையில் போட்டு, கொதிக்க வைத்து எண்ணெய் தயார் செய்து வைத்துவிடுவார்கள். இந்த எண்ணையை நான் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு தேய்த்துக் குளிப்பேன். இதைத்தான் நான் தலைக்குபயன்படுத்தி வருகிறேன் என்று நடிகை ரச்சித்தா தனது அழகின் ரகசியம் குறித்தும், ரசிகர்களுக்கு சில டிப்ஸ்களையும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X