Fire: பாலாவுக்கு சம்பளம் சேர்த்து கொடுக்கனும்.. ஊரே ரச்சிதா பற்றி பேசுது.. இயக்குநர் சொல்றத கேளுங்க!

சென்னை: நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 14 ஆம் தேதி பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர். படம் உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் காசி என்ற நபர் பல பெண்களை ஏமாற்றி, தற்போது சிறையில் உள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Balaji Murugadoss J Sathishkumar

படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான ஜே. சதீஷ்குமார் இயக்கியுள்ளார். படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரோமோசன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரைலர் என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை படக்குழு வெளியிட, அதில் நடித்திருந்த, பாலாஜியும் ரச்சிதாவும் ஓவர் கிளாமராக நடித்து இருந்தனர். குறிப்பாக, ரச்சிதாவின் கிளாமர் குறித்து இணையத்தில் பலரும் கமெண்ட் அடித்தனர்.

Balaji Murugadoss J Sathishkumar

படத்தில் நடித்தது தொடர்பாக, பாலாஜி கூறும் போது, இந்தப் படம், கதாநாயகனாக எனக்கு இரண்டாவது படம். இந்தப் படத்தில் நான் நடித்துள்ளேன் என்பதை விடவும், வாழ்ந்துள்ளேன் என தான் பலர் கூறுகின்றனர். மூன்று படங்களில் நடித்தால் என்ன அனுபவம் கிடைக்குமோ, அந்த அனுபவம் எனக்கு இந்தப் படத்தில் கிடைத்துள்ளது. இது போன்ற படத்தில் நடிக்க தைரியம் வேண்டும். படத்தில் நாம் என்னதான் நடித்தாலும் நம்முடன் நடிக்கும் சக நடிகைக்கு கம்ஃபர்ட்டாக நடிக்க வேண்டும். இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை இந்தப் படத்தில் நடித்துள்ளேன். படம் அனைவருக்கும் ஒரு நல்ல கருத்தைச் சொல்லியுள்ளது என பேசினார்.

Balaji Murugadoss J Sathishkumar

அதன் பின்னர் இயக்குநர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் கூறும்போது, "பாலாஜி கூறியது சரிதான். இந்தப் படத்தில் நடிக்க ஒரு தைரியம் வேண்டும். இது போன்ற படத்தில் நடிப்பது உண்மையிலேயே மிகவும் சிரமமான விஷயம். இந்தப் படத்தில் பாலா நடித்ததற்காக அவருக்கு நான் கூடுதலாகத்தான் சம்பளம் கொடுக்க வேண்டும்" என பேசினார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஜே. சதீஷ் குமாரின் பேச்சினைக் கேட்டு, இணையவாசிகளும் ரச்சிதாவின் ரசிகர்களும், " ரச்சிதாவினால்தான் படத்திற்கு இந்த அளவிற்கு புரோமோசன் கிடைத்துள்ளது. ஆனால் இயக்குநர் ரச்சிதாவுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க வேண்டும் என கூறவில்லையே" என பேசி வருகின்றனர்.

Balaji Murugadoss J Sathishkumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X