மூடப்பட்ட அரங்குக்குள் திடீர் தீ... பாவனா நடிக்கும் பட ஷூட்டிங்கில் பரபரப்பு... உயிர் தப்பிய ஹீரோ

By

பெங்களூரு: நடிகை பாவனா ஹீரோயினாக நடிக்கும் பட ஷூட்டிங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஹீரோ உயிர் தப்பினார்.

Recommended Video

தலைநகரம் பற்றி எரிகிறது | PA RANJITH FIERY SPEECH | NARUVI AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL

பிரபல கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடித்த படம், பஜரங்கி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது எடுக்கப்படுகிறது.

இதில் சிவராஜ்குமார் ஜோடியாக பாவனா நடிக்கிறார். ஹர்ஷா இயக்குகிறார். இந்நிலையில், இந்தப் படத்துக்காக பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள மோகன் பி கேரே ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.

தீ விபத்து

தீ விபத்து

இங்கு நேற்று படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. படப்பிடிப்பில் ஹீரோ சிவராஜ்குமார், நடிகர்கள் மது, லோகு உட்பட சுமார் 250-க்கும் அதிகமானோர் இருந்தனர். அப்போது திடீரென்று செட்டின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது.

ஒரு பகுதி

ஒரு பகுதி

செட்டுக்கு உள்ளே செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததால், பீதி ஏற்பட்டது. நடிகர் சிவராஜ்குமார் உட்பட நடிகர், நடிகைகள் பாதுகாப்பான இடத்துக்கு ஓடினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததால், உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் செட்டின் ஒரு பகுதி எரிந்தது.

சிறப்பு அரங்கம்

சிறப்பு அரங்கம்

இதுபற்றி படத்தின் இயக்குனர் ஹர்ஷாவிடம் கேட்டபோது, அடுத்த ஷெட்யூலுக்காக சிறப்பு அரங்கத்தை உருவாக்கி இருந்தோம். பிரமாண்டமான அரங்கம் இது. ஒரு மாதமாக, இதற்கான பணி நடந்தது.

மின் கசிவு

மின் கசிவு

திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் செட்டின் ஒரு பகுதி எரிந்துவிட்டது. யாருக்கும் உயிர் சேதமில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மூடப்பட்ட அரங்கம் எனபதால் புகை சூழ்ந்துகொண்டது. பிறகு அதை போராடி வெளியேற்றினோம் என்றார்.

பாவனா

பாவனா

இந்தப் படத்தின் ஹீரோயினாக நடிக்கும் பாவனாவின் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கழுத்தில் தாயத்து, நெற்றியில் பெரிய பொட்டு, தலையை விரித்துபோட்டபடி ஆக்ரோஷமாக இருக்கிறார் பாவனா. இதுபற்றி கூறிய இயக்குனர், இதுவரை பார்த்திராத கேரக்டரில் பாவனா நடித்திருக்கிறார். இது புதிரான கேரக்டர் என்று கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X