Michelle Yeoh: ஆசியாவிற்கே பெருமை சேர்த்த முதல் பெண்மணி.. பாயும் புலி பதுங்கும் நாகம் ஞாபகமிருக்கா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: 1983ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் மலேசியா விருது வென்ற மிச்செல் யோ இன்று தனது 60வது வயதில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை Everything Everywhere All At Once படத்துக்காக வென்றுள்ளார்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்த மிச்செல் யோ அதிகமாக சீனப் படங்களில் ஜாக்கி சான், ஜெட்லீ உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

முதல் முறையாக ஆசிய பெண்மணி ஒருவர் ஆஸ்கர் விருது வெல்வது இதுவே முதன்முறை என ஒட்டுமொத்த ஆசியாவும் மிச்செல் யோவை கொண்டாடி வருகிறது.

 ஆசிய நடிகை

ஆசிய நடிகை

மலேசியாவை சேர்ந்த நடிகை மிச்செல் யோ 1984ம் ஆண்டு தி அவுல் vs பாம்போ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், யெஸ் மேடம், போலீஸ் ஸ்டோரி 3, க்ரோச்சிங் டைகர் ஹிடன் டிராகன், தி மம்மி 3, குங்க்ஃபூ பாண்டா, பாஸ் லெவல், Everything Everywhere All At Once மற்றும் அவதார் 3ம் பாகத்திலும் இவர் நடித்து வருகிறார்.

 பாயும் புலி பதுங்கும் நாகம்

பாயும் புலி பதுங்கும் நாகம்

1992ம் ஆண்டு ஜாக்கி சானின் போலீஸ் ஸ்டோரி 3 படத்தில் நடித்து அசத்திய மிச்செல் யோ, 2000ம் ஆண்டு வெளியான Crouching Tiger, Hidden Dragon படத்தில் நடித்திருந்தார். தமிழில் பாயும் புலி பதுங்கும் நாகம் என்கிற டைட்டிலில் வெளியான இந்த படம் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

 சரித்திர சாதனை படைத்த மிச்செல் யோ

சரித்திர சாதனை படைத்த மிச்செல் யோ

டேனியல் க்வான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படம் இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் அதிகபட்சமாக 7 ஆஸ்கர் விருதை வென்று மிரள வைத்துள்ளது. நெற்றிக்கண் எல்லாம் வைத்துக் கொண்டு வித்தியாசமான திரைக்கதையில் லீடு ரோலில் நடித்த மிச்செல் யோ சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றார். ஆசியாவிலேயே ஆஸ்கர் வென்ற முதல் பெண்மணி என்கிற சரித்திர சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

 என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்

என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்

ஆஸ்கர் விருது வென்ற மிச்செல் யோ இந்த வயதில் என்னால் இப்படியொரு சாதனை செய்ய முடிகிறது என்றால் நிச்சயம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களால் ஏகப்பட்ட சாதனைகளை செய்ய முடியும் என ஆஸ்கர் விருதினை வென்ற உற்சாகத்தில் ரொம்பவே நெகிழ்ச்சியுடன் பேசினார்.

 குவிகிறது பாராட்டு

குவிகிறது பாராட்டு

மிச்செல் யோவை குழந்தை பருவத்தில் இருந்தே பார்த்து வளர்ந்த ஏகப்பட்ட ரசிகர்கள் அவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்ற நிலையில், அவரது திரைப்படக் காட்சிகளை பதிவிட்டு அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் மிச்செல் யோ ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X