twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் நாள் முதல் காட்சி யூடியூபர்கள் பேட்டி..அலறும் திரையுலகினர்

    |

    முதல் நாள் முதல் காட்சி, ஸ்பெஷல் ஷோ போடும் திரையுலகினர் அந்த படம் பற்றி யூடியூபர்ஸ் ரசிகர்களிடம் கருத்து எடுத்து போடக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

    படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை படம் பார்த்துவிட்டு வருபவர்களிடம் கேட்டு எடுத்து போடுவதால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

    முதல் நாள் முதல்காட்சி, ஸ்பெஷல் ஷோ, ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு டிக்கெட் என ஒருவாரத்தில் வசூலை குவிக்கும்போது பார்க்க வருபவர் படம் பற்றி தெரிந்துக்கொள்ளக்கூடாதா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.

    எத்தனை நாளைக்கு தான் முரட்டு சிங்கிளாகவே இருப்பது..இந்தி நடிகையுடன் டேட்டிங் செல்லும் பிரபாஸ்!எத்தனை நாளைக்கு தான் முரட்டு சிங்கிளாகவே இருப்பது..இந்தி நடிகையுடன் டேட்டிங் செல்லும் பிரபாஸ்!

    சாதாரணமாக வெளிவந்த லெஜண்டுகளின் படங்கள்

    சாதாரணமாக வெளிவந்த லெஜண்டுகளின் படங்கள்

    தமிழ் திரையுலகம் மட்டுமல்ல தென் இந்திய வட இந்திய திரையுலகிலும் ஒரு படம் வெளியாகும் முன் அது குறித்த விளம்பரங்கள், போஸ்டர், சிங்கிள், ப்ரமோஷன், டீசர், கிளிம்ஸ், ட்ரெய்லர், பாடல்கள் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி பின்னர் படத்தை பார்க்க வைப்பார்கள். இதற்காக ரசிகர்கள் ஆவலாக பறப்பார்கள். முன்பெல்லாம் சாதாரணமாக முதல் காட்சி வழக்கமாக காலை 11.30 மணிக்காட்சியாகத்தான் தொடங்கும். லெஜண்டுகள் படங்களும் அப்படித்தான். ஆனால் அதன் பின்னர் ரசிகர் மன்றங்களுக்காக காலை சிறப்புக்காட்சி என 8 மணிக்கு ஒரு காட்சி ரசிகர் மன்றங்கள் அந்த ஷோ டிக்கெட்டை வாங்கி பிளாக்கில் விற்று வருமானம் தேற்றிக்கொள்வார்கள்

    இப்படித்தான் வந்தது சிறப்புக்காட்சிகள்

    இப்படித்தான் வந்தது சிறப்புக்காட்சிகள்

    ஒரு கட்டத்தில் இதையே நாம் ஏன் செய்யக்கூடாது என ஸ்பெஷல் காட்சி என 5 அல்லது 6 காட்சிகள்கூட ஓட்டப்பட்டது. இதில் டிக்கெட் விலையும் 10 மடங்கு வரை ஹீரோவை பொறுத்து வைத்து விற்கப்பட்டது. இப்படி 5 நாட்கள் வரை ஓட்டினார்கள். படம் நன்றாக இல்லை என்று ரசிகன் தெரிந்துக்கொள்வதற்கு முன் பெரிய அளவில் வசூலானது. அதன் பின்னர் சில சமூக ஆர்வலர்கள் வழக்கு போட்டவுடன் சிறப்புக்காட்சிகள் கூன்று நாட்கள் மட்டும் என கோர்ட் உத்தரவிட்டது. டிக்கெட் விலையில் சொன்னது எதுவும் இதுவரை கடைபிடிக்கப்படுவதில்லை.

    முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் கருத்துக்களை வெளியிடு யூடியூபர்ஸ்

    முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் கருத்துக்களை வெளியிடு யூடியூபர்ஸ்

    இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சி கான்செப்ட் வந்தவுடன் சில ஊடகங்கள் வெளியில் வரும் ரசிகர்களிடம் படம் எப்படி என கேட்டு அதை வெளியிட்டார்கள். நாளடைவில் இது பெரிய நோய் போல் பரவி நூற்றுக்கணக்கான யூடியூப் சானல்கள் ரசிகர்களிடம் மைக்கை நீட்ட ஆரம்பிக்க திரையுலகினருக்கும் சந்தோஷமாக இருந்தது. நம்ம படத்தை ப்ரமோட் பண்ணுகிறார்களே என்று சந்தோஷப்பட்டனர்.

    படம் நன்றாக இல்லையென்றாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் ரசிகர்கள்

    படம் நன்றாக இல்லையென்றாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் ரசிகர்கள்

    ஆனால் இதெல்லாம் படம் நன்றாக இருக்கும் வரை தானே. படம் சரியில்லை என்றால் சில ரசிகர்கள் விமர்சனத்தை சொல்லிவிட்டு செல்வார்கள். பெரும்பாலானோர் படம் நல்லா இல்லாவிட்டாலும் பெருந்தன்மையுடன் சொல்ல மாட்டார்கள் சிலர் சொல்லிவிடுவார்கள். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. படத்திற்கு வரும் விஐபிக்களும் நன்றாக இருக்கிறது என பேட்டி அளித்துவிட்டுத்தான் செல்வார்கள்.

    ஓரிரண்டு வாரங்களுக்கு படம் குறித்த கருத்து வேண்டாம்

    ஓரிரண்டு வாரங்களுக்கு படம் குறித்த கருத்து வேண்டாம்

    இந்நிலையில் சமீப காலமாக திரையுலகில் முதல் நாள் முதல் காட்சியில் யூடியூபர்கள் கருத்துக்கேட்பதை தடை செய்யவேண்டும் என்கிற குரல் ஒலிக்க தொடங்கி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கோரிக்கையாக வரும் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு வாரம் இரண்டு வாரத்திற்கு படம் குறித்த கருத்து வெளிவரவேண்டாம். யூடியூபர்களை அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இது நடைமுறை சாத்தியம் இல்லாதது. அதில் மட்டுமா ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் தெரிவிக்கிறார்கள்.

    யூடியூபர்களுக்கு கார்த்தி வைத்த கோரிக்கை

    யூடியூபர்களுக்கு கார்த்தி வைத்த கோரிக்கை

    நேற்று பொன்னியின் செல்வன் செய்தியாளர் சந்திப்பிலும் நடிகர் கார்த்தி, (நடிகர் சங்க பொருளாளரும் கூட) இதுபற்றி கோரிக்கை வைத்துள்ளார். முதல் நாள் முதல் காட்சி பேட்டி எடுப்பவர்கள் தங்கள் வீடியோக்கு வைக்கும் முகப்பு படத்தை படம் நன்றாக இருந்தாலும் படம் நன்றாக இல்லை என்பதுபோல் முகப்பு படத்தை வைப்பதால் மேலோட்டமாக பார்ப்பவர்கள் படம் நல்லா இல்லையோ என்று எண்ணத்தோன்றும் அதை தவிர்க்கணும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    சமூக வலைதள காலத்தில் யூடியூபர்களை கட்டுப்படுத்தி என்ன பயன்

    சமூக வலைதள காலத்தில் யூடியூபர்களை கட்டுப்படுத்தி என்ன பயன்

    இதுகுறித்து கருத்து தெரிவித்த விமர்சகர் ஒருவர் "முதல் நாள் முதல் காட்சியில் வரும் விமர்சனத்தை வைத்து மட்டும் ஒரு படம் ஓடிவிடாது, ஆனால் ஓரிரு வாரம் ரசிகர்களுக்கு படம் நன்றாக இல்லை என தெரிவதற்கு முன் படத்தை ஓட்டிவிடலாம் என நினைக்கின்றனர். இது தவறான ஒன்று. படத்தை நன்றாக எடுங்க, இன்று முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் பேட்டி மட்டும் படத்தை பற்றி சொல்வதில்லை, சமூக வலைதளங்களில் முக்கியமாக ட்விட்டரில் அடுத்த நிமிடம் மீம்ஸ், கருத்து என போட்டு சொல்லி விடுகிறார்கள். ஆகவே விஞ்ஞான வளர்ச்சியில் எதையும் மூடி மறைக்க முடியாது" என்றார்.

    English summary
    The filmmakers, who are screening on a special show from the first day, have urged YouTubers not to take interviews with the fans who watch the movie. Is the picture good? Isn't it? People Review who come after watching the film, it will be affected producers. they said. Netizens have raised the question whether the audience should not know about the film when it accumulates collections in a week like the first-day premiere, special show, and tickets for thousands of rupees.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X