கெஸ்ஸிங் ஏதும் இல்ல.. எல்லாமே லீக் தான்.. பிக் பாஸ் வீட்டுல இருந்து முதல்ல வெளிய போனது அவங்கதான்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் முதலாவதாக வெளியேறிய போட்டியாளர் நடிகை ரேகா தான்.

சனிக்கிழமை எபிசோடை பார்க்கும் போதே, ரேகா தான் வெளிய போறாங்கன்னு ஏகப்பட்ட ரசிகர்கள் மீம்களாக போட்டுத் தாக்கினர்.

இந்நிலையில், அவர்கள் சொன்னது அப்படியே 100 சதவீதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6 பேர் எவிக்‌ஷன் லிஸ்டில்

6 பேர் எவிக்‌ஷன் லிஸ்டில்

ஆஜீத், ஷிவானி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் ரேகா ஆகிய 6 பேர் தான் இந்த வார எவிக்‌ஷன் லிஸ்டில் இடம்பெற்று இருந்தனர். இதில், யார் வெளியே போவார்கள், யாருக்கு ஓட்டுப் போட்டு மக்கள் காப்பாற்றுவார்கள் என இந்த வாரம் முழுவதும் ஷோ சிறப்பாக நகர்ந்தது.

அப்பாடா எஸ்கேப்

அப்பாடா எஸ்கேப்

இதில், சனிக்கிழமை எபிசோடில் ஆஜீத், ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியனை மக்கள் ஓட்டுப் போட்டு காப்பாற்றி விட்டார்கள். அடுத்ததாக ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் முதலாவதாக முன்னாள் மாடல் அழகியான சம்யுக்தாவை மக்கள் காப்பாற்றி உள்ளார்கள் என கமல் சொன்னதும், சனம் ஷெட்டிக்கு கொஞ்சம் அதிகமாவே பதற்றம் தொற்றிக் கொண்டது.

முதல் எலிமினேட்

முதல் எலிமினேட்

பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எவிக்‌ஷன் இல்லாத நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஒரு 14 நாட்கள், அதற்கு முன்னதாக கொரோனா குவாரண்டைன் ஒரு 14 நாட்கள் என நடிகை ரேகா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தனது வீட்டையும் செல்ல மகளையும் பிரிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடைசியாக சனம் ஷெட்டி காப்பாற்றப்பட்டு நடிகை ரேகா முதல் போட்டியாளராக 4வது சீசன் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறினார்.

முன்னாடியே லீக் ஆகிடுச்சு

முன்னாடியே லீக் ஆகிடுச்சு

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கான எபிசோடுகளை வெள்ளியன்றே ஷூட் செய்து விடுவார்கள் போல தெரிகிறது. அதனால், நேற்றே ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள், நடிகை ரேகா தான் வெளியேறுகிறார் என்பதை சில ஆதாரங்களுடன் உடைத்து விட்டதால், இன்றைய எலிமினேஷன் படலம் சற்று போராடித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

யார் யார் எப்போ போறாங்க

யார் யார் எப்போ போறாங்க

மேலும், சில நாட்களுக்கு முன்பாகவே யார் யார் எத்தனை நாட்கள் வீட்டில் இருப்பார்கள், எப்போது எவிக்ட் ஆவார்கள், அவர்களின் சம்பள விவரங்கள் என்ன உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகின. அதிலும், நடிகை ரேகா தான் முதலில் வெளியேறுகிறார் என இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் தெரிந்து விடும்

அடுத்த வாரம் தெரிந்து விடும்

அந்த லிஸ்ட் உண்மையா என்பது, அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து முன்னாள் மாடல் அழகி சம்யுக்தா வெளியேறினால் உறுதியாகி விடும். மக்கள் ஓட்டு போடுறதெல்லாம் சும்மா கதைங்க, கடலோரக் கவிதைகள் ரேகாவுக்கு இல்லாத ரசிகர்களா, சம்யுக்தா, சனம் ஷெட்டிக்கு இருக்கப் போறாங்க என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X