twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விருதுகள் குவிக்கும் தமிழின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் பற்றிய திரைப்படம்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : ஒரே பால் மனிதர்கள் இடையேயான உறவுகள், காதல் பற்றி ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆண்களை ஆண்களே விரும்புவர்களான 'கே' பற்றியும், பெண்களை பெண்களே விரும்பும் 'லெஸ்பியன்' பற்றியும் படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், தமிழில் அப்படியான படங்கள் வந்ததில்லை. சில படங்களில் ஒருசில காட்சிகள் மட்டும் அவற்றைப் பற்றி வைக்கப்பட்டிருக்கின்றன.

    தற்போது ஓரின பால் ஈர்ப்பாளர்களை பற்றிய ஒரு முழு நீள தமிழ் படம் தயாராகி இருக்கிறது. அதன் டைட்டில் 'என் மகன் மகிழ்வன்' (My son is gay). ஓரின ஈர்ப்பாளராக இருக்கும் தன் மகனின் பிரச்னைகளை ஒரு தாய் எப்படி கையாளுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

    First gay film in tamil

    இந்தப் படத்தில் தாயாக அனுபம் குமாரும், மகனாக அஸ்வின்ஜித்தும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர அபிஷேக் ஜோசப், ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது.

    First gay film in tamil

    மெல்போர்ன், நியூயார்க், கோல்கட்டா, சென்னை, ராஜஸ்தான், பிலடெல்பியா நகரங்களில் நடந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, மக்களின் கவனத்தை ஈர்த்த படம் இது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த இரண்டாவது இந்தியன் வேர்ல்ட் பிலிம் ஃபெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டு சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Read more about: gay film என் மகன்
    English summary
    There are a lot of English movies about Gay and lesbians. But no such films have come in Tamil. Now, a full-length Tamil gay movie is about preparing homosexuals. Its titled as 'My son is gay'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X