சும்மா கிழியா.. சுமாரான கிழியா.. வைரலாகும் தர்பார் படம் குறித்த மரண ட்ரோல்கள்!
Recommended Video
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் இன்று ரிலீசாகியுள்ளது. தியேட்டர்களில் இன்றே பொங்கல், தீபாவளி போன்ற கொண்டாட்டங்களை ரசிகர்கள் அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.
தர்பார் படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.
அதே சமயம், இரண்டாம் பாதியில் முருகதாஸ் தூங்க வச்சிட்டாரு.. போன்ற தர்பார் ட்ரோல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சுமாரான கிழிதான்
தர்பார் படம் சும்மா கிழியாக இல்லை என்றும் சுமாரான கிழி தான் என்றும் சமூக வலைதளத்தில் கலவையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இரண்டாம் பாதி ரொம்ப மொக்கை என்றும், வில்லன் கதாபாத்திரம் ரொம்ப வீக்காக எழுதப்பட்டுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
செகண்ட் ஹஃப்
தர்பார் படம் பார்த்த பலரும் முதல் பாதி ரஜினியின் மாஸ் மற்றும் ஆக்ஷனுடன் பட்டையை கிளப்புகிறது என்றும் இரண்டாம் பாதி குடும்ப சென்டிமென்ட் என ஏ.ஆர். முருகதாஸ் கொஞ்சம் பிளேடு போட்டுள்ளார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
படையப்பா சீன்
படையப்பா படத்தில் சட்டையை கழட்டி வைத்து ரஜினி சண்டை போடும் மாஸ் சீன் போலவே தர்பார் படத்திலும், ஒரு மாஸ் சண்டை காட்சி இடம்பிடித்துள்ளது. தலைவர் ரசிகர்களுக்கான படம் இது என கொண்டாடி வருகின்றனர்.
தூங்கிட்டேன்
தர்பார் படத்தை பார்த்து வெளியே வந்த ரசிகர்களிடம் பல மீடியாக்கள் பேட்டி எடுத்தன. அதில் சில ரசிகர்கள் செகண்ட் ஹாஃபில் தூங்கிட்டேன் என பேட்டி கொடுத்துள்ளனர்.
பாட்ஷாவுக்கு அப்புறம்
தலைவரின் கேரியரில் பாட்ஷாவுக்கு அப்புறம் தர்பார் தான் என ரஜினி ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தூக்கம் கியாரண்டி
தூக்கம் வரவில்லை என்பவர்கள் தர்பார் படத்திற்கு போகலாம்.. தூக்கம் கியாரண்டி என இந்த ரசிகை கலாய்த்துள்ளார்.
ஃபிளாப்
படம் ஊத்திக்கிச்சு ஃபிளாப் எனவும் சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஏமிரா இதி
தர்பார் படம் இரண்டாம் பாதியில் செம்ம பிளேடாக இருக்கிறது என்றும், ரசிகர்கள் தியேட்டர்களில் தூங்கி வழிகின்றனர் என சில ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
3 பேட்ட
தர்பார் படம் 3 பாஷா, 3 மூன்று முகம், 3 பேட்ட அளவுக்கு செம மாஸாக இருக்கிறது. தலைவரின் ஆட்டம் ஒவ்வொரு காட்சியிலும் ஈர்க்கிறது. நிவேதா தாமஸின் நடிப்பு வேற லெவல் என ரசிகர்கல் புகழ்ந்து தள்ளுகின்றனர்.


Click it and Unblock the Notifications











