முதல்ன்னா எப்பவுமே ஸ்பெஷல் தான் ...எதை சொல்கிறார் நஸ்ரியா

கொச்சி : தமிழ், மலையாளம் படங்களில் நடித்து புகழ்பெற்றவரான நஸ்ரியா, 2006 ல் பளிங்கு என்ற மலையாள படத்தின் மூலம் நடிக்க வந்தார். தமிழில் ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

2014 ல் திருமணம் என்ற நிக்ஹா படத்திற்கு பிறகு, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 4 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் நஸ்ரியா. அதன் பிறகு 2018 ல் கூடே படத்தின் மூலம் நடிக்க மீண்டும் நடிக்க வந்தார். இருந்தாலும் அதிக படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது ஃபோட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

முதல் தெலுங்கு படம்

முதல் தெலுங்கு படம்

இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க நஸ்ரியா ஒப்பந்தமாகி உள்ளார். இந்த பட சூட்டிங்கிற்காக நஸ்ரியா, தனது கணவர் ஃபகத் ஃபாசிலுடன் ஐதராபாத் சென்றுள்ளார். விவேக் ஆத்ரேயா இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம்.

ரொமான்டிக் காமெடி படம்

ரொமான்டிக் காமெடி படம்

ஆன்டி சுந்தரினிகி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். இது ரொமான்டிக் காமெடி கதையாம். இந்த படத்தின் நானிக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நஸ்ரியா கலந்து கொண்டுள்ளார். பிறகு இது தொடர்பாக ட்விட்டரிலும் கருத்து பதிவிட்டுள்ளார்.

முதல்ன்னா ஸ்பெஷல் தான்

முதல்ன்னா ஸ்பெஷல் தான்

அதில், "இன்று என்னுடைய முதல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். முதலாவது எப்போதும் ஸ்பெஷல். அதனால் இந்தப் படமும் எனக்கு ஸ்பெஷல்" என குறிப்பிட்டுள்ளார் நஸ்ரியா. இதற்காக நஸ்ரியாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நஸ்ரியாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவை இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர்.

Recommended Video

ENJOY ENJAAMI பாடலுக்கு பிரபலங்கள் ஆட்டம் | Losliya, AlyaManasa, Janani
ஃபகத்திற்கும் தெலுங்கு வாய்ப்பு

ஃபகத்திற்கும் தெலுங்கு வாய்ப்பு

நஸ்ரியா மட்டுமல்ல அவரது கணவர் ஃபகத் ஃபாசிலும் முதல் முறையாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார். அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் வில்லன் கேரக்டரில் ஃகத் ஃபாசில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை சுகுமாரண டைரக்டர் செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X