மிஸ்டரி த்ரில்லர் கதையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. லாக்டவுன் முடிந்ததும் அடுத்த கட்ட ஷூட்டிங்!

By

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து மிஸ்டரி த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Aiswarya Rajesh Prepares Egg dosa in shooting Spot

அட்டகத்தி, காக்காமுட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, நம்ம வீட்டுப் பிள்ளை உட்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஷூட்டிங் தடை

ஷூட்டிங் தடை

தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி (கனா ரீமேக்), மிஸ் மேட்ச், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படங்களில் நடித்தார். அடுத்து, டக் ஜகதிஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்துள்ள, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை உட்பட சில படங்கள் வெளிவர இருக்கின்றன. லாக்டவுன் காரணமாக, இவர் நடிக்கும் சில படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிக்கும் இன்னொரு படம், 'திட்டம் இரண்டு'. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார். இவர், 'யுவர்ஸ் சேம்ஃபுல்லி' என்ற குறும்படம் மூலம் கவனம் ஈர்த்தவர்.

கோகுல் பினாய்

கோகுல் பினாய்

மிஸ்ட்ரி த்ரில்லர் கதையான இந்தப் படத்தை தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் இணைந்து தயாரிக்கின்றனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். இவர், மான்ஸ்டர், பண்ணையாரும் பத்மினியும், மாஃபியா ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். மாபியா படத்தில் இவரது ஒளிப்பதிவு பேசப்பட்டது.

லாக்டவுன் முடிந்ததும்

லாக்டவுன் முடிந்ததும்

சதீஷ் ரகுநாதன் இசை அமைக்கிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் சென்னையில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். படக்குழுவுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X