»   »  “பப்பரப்பாம்” படம் 'பப்பரப்பா'ன்னு கெடக்கே... எப்பப்பா ரிலீஸ் பண்ணுவீங்க..?

“பப்பரப்பாம்” படம் 'பப்பரப்பா'ன்னு கெடக்கே... எப்பப்பா ரிலீஸ் பண்ணுவீங்க..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உதவியாளரும், 'உறுமி' படத்தின் வசனகர்த்தாவுமான சசிகுமாரன் இயக்கியுள்ள புதிய படம் ''பப்பரப்பாம்''.

'நான் மகான் அல்ல', 'யாழ்' படங்களில் நடித்துள்ள வினோத் கதாநாயகனாக நடித்துள்ளார். சதுரங்க வேட்டை இஷாரா, யாமினி, ராஜா, கதிர்கமல், நாய்கள் ஜாக்கிரதை ஜெனிஷ், சூப்பர் சிங்கர் புகழ் அழகேசன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

சுத்தம் என்பது நமக்கு...

சுத்தம் என்பது நமக்கு...

படத்தை வித்தியாசமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் படக்குழுவினர் கிட்டத்தட்ட நூறுபேர் கலந்து கொண்டு, கடந்தாண்டு நவம்பர் மாதம் பட்டினப்பாக்கம்- நொச்சிக்குப்பம் அருகேயுள்ள சாலைகளைச் முழுவதுமாக சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து தூய்மைப் பணி...

தொடர்ந்து தூய்மைப் பணி...

கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு முறை மட்டும் இல்லாமல், தொடர்ந்து சில வாரங்கள் படக்குழுவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு சமூக சேவையோடு தங்களது படவேலைகளைத் துவக்கினர்.

இது தான் கதை...

இது தான் கதை...

மரணத்திலிருந்து உயிர்த்தெழும் ஒருவனைப் பற்றிய கதை தான் இந்த பப்பரப்பாம். படத்துக்கு ஒளிப்பதிவு சண்முகசுந்தரம், இசை கே எஸ் ரோஸ், எடிட்டிங் கே எம் ரியாஸ் ஆகும்.

பர்ஸ்ட் லுக்...

பர்ஸ்ட் லுக்...

இப்படத்தின் போஸ்டரில் கழுத்தில் மாலை அணிவிக்கப் பட்டு, நெற்றியில் காசு ஒட்டப்பட்டு, நாடிக் கட்டு எல்லாம் கட்டப்பட்ட ஒருவன் எகிறிப் பறப்பது போல் காணப்படுகிறது. இது படத்தின் கதையை மேலோட்டமாகக் கூறுவது போல் வித்தியாசமாக அமைந்துள்ளது.

எப்போ ரிலீஸ்?

எப்போ ரிலீஸ்?

இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

English summary
Papparapaam is a upcoming Tamil fim directed by Sasikumaran, in which Nan magan alla fame Vinoth is doing the lead role.
Please Wait while comments are loading...