சிவகார்த்திகேயன் வெளியிட்ட "தனுசு ராசி நேயர்களே" பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சென்னை : ஹரிஷ் கல்யாண் ,டிகங்கனா ,ரெபா மோனிகா ஜான் ஆகியோர் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஹரிஷ் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுடையவராக நடித்துள்ளார். ஸ்ரீ கோகுலம் கோபாலன் தயாரித்து இருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்.

தொடர்ந்து தோல்வி:

தொடர்ந்து தோல்வி:

ஹரிஷ் கல்யாண் "சிந்து சமவெளி" திரைபடத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. அதற்கு பிறகு ஹரிஷ் கல்யாணிற்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. அவர் நடித்த பல படங்கள் தோல்வியில் முடிந்தது.

வாய்ப்புகள் குவிந்தன :

வாய்ப்புகள் குவிந்தன :

நல்ல வெற்றிகாக ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் சீசன் 1ல் பங்கு கொண்டார். அதில்
அவருக்கு நல்ல பெயர் கிடைக்க அங்கிருந்து வெளியில் வந்த பிறகு அவருக்கு
பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. ஹரிஷ் மற்றும் பிக் பாஸ் சீசன் 1ல்
பங்கேற்ற ரைசா இருவரும் இணைந்து நடித்த "பியார் பிரேமா காதல்" திரைப்படம்
நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஹரிஷ் நடித்த "இஸ்பேடு ராஜாவும் இதய
ராணியும்" படமும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தற்போது "தனுசு ராசி
நேயர்களே" படத்தில் நடித்து வருகிறார் ஹரிஷ். அவர் தெலுங்கிலும் சில
படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி
மாபெரும் வெற்றி அடைந்த 'ஜெர்சி' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார் ஹரிஷ் .

பிரபல நடிகரின் மகன்:

பிரபல நடிகரின் மகன்:

இந்த படத்தை இயக்கம் அறிமுக இயக்குனரான சஞ்சய் பாரதி, பிரபல இயக்குனர்
மற்றும் நடிகரான சந்தான பாரிதியின் மகன் ஆவார். சஞ்சய் சில படங்களில்
சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். தற்போது அவர் இயக்கி
வரும் "தனுசு ராசி நேயர்களே" திரைப்படமே அவரின் முதல் படம்.

பிகில் பிளேயர்:

பிகில் பிளேயர்:

இந்த படத்தில் பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார்.
இவர் ஜாக்கோபின்டே ஜுவர்கராஜியம் ,மைக்கேல், ஜருகண்டி போன்ற படங்களில்
நடித்தவர் .இவர் பகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில்
நடித்திருந்தார் ,இவரது கதாபாத்திரம் ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்டு
கால்பந்தை விட்டு விலகி வீட்டிலே முடங்கி இருக்கும் பெண் கதாபாத்திரம்.
இவரை விஜய் எப்படி கால்பந்து விளையாட்டை விளையாட வைக்கிறார் என்று பிகில்
படத்தில் காட்சிகள் அமைந்திருக்கும், இவர் வரும் அந்த காட்சிகள் எல்லாம்
கைதட்டுகள் திரையரங்குகளில் நிரம்பி இருந்தன என்றே சொல்லலாம்.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட போஸ்டர்:

தற்போது சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்,டிகங்கனா, ரெபா மோனிகா
ஜான் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் 'தனுசு ராசி நேயர்களே' . இந்த
படத்தின் முதல் பார்வையை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில்
வெளியிட்டு இருக்கிறார். இதில் ஹரிஷ் ஒரு ஆட்டோமொபைல் மெக்கானிக்காக
நடித்துள்ளார். படத்தை பற்றின மேலும் பல தகவல்கள் கூடிய விரைவில்
அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுவென நடைபெற்று
சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரோடக்ஷன்ஸ் வேலைகள்
மும்மரமாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X