ஆலம்பனா படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது... பூதமாக நடித்திருப்பது யார் தெரியுமா!
சென்னை : ஆலம்பனா படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது.
அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
மிகவும் பிரபலமான அலாவுதீன் மற்றும் அற்புத விளக்கு கான்செப்டில் உருவாகியிருக்கும் இந்த ஃபேன்டஸி படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

காலம் கடந்தும்
தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான ஃபேன்டஸி திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த அளவிற்கு மிக சொற்பமாகவே இருக்கின்ற நிலையில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே இதுபோன்ற ஃபேன்டஸி கலந்த காமெடி படங்களை இயக்கி வருகின்றனர். அதில் ஒரு சில படங்கள் காலம் கடந்தும் இன்றுவரை புகழ்பெற்று விளங்குகிறது.

சொல்லும் வசனம்
1979ஆம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு தெலுங்கு மொழியிலும் டப் செய்து வெளியானது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கடந்தும் இந்த படத்தின் தாக்கம் இன்றைய தலைமுறையினருக்கும் இருக்க இதில் நடிகர் அசோகன் பூதமாக நடித்திருப்பார். அவர் ஒவ்வொரு முறை வரும்போது ஆலம்பனா என சொல்லும் வசனம் பின் பிரபலமானது.

பூதமாக முனிஸ்காந்த்
அந்த வசனம் இப்பொழுது ஆலம்பனா என்ற பெயரில் ஃபேன்டஸி திரைப்படம் உருவாக அதனை அறிமுக இயக்குனர் பாரி கே விஜய் இயக்குகிறார். டாக்டர் படத்தை தயாரித்திருக்கும் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நடிகர் வைபவ் இதில் கதாநாயகனாக அலாவுதீன் கதாபாத்திரத்தில் நடித்திருக்க பூதமாக பிரபல காமெடி நடிகர் முனிஸ்காந்த் நடித்துள்ளார்.

சிரித்த முகத்துடன்
ஆலம்பனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளத்தில் கலக்கி வர அதில் அலாவுதீன் கெட்டப்பில் நடிகர் வைபவ் நாற்காலியில் அரசர் போல கால் மேல் கால் போட்டுக்கொண்டு கையில் விளக்குடன் உட்கார்ந்து கொண்டிருக்க அதற்குப்பின்னால் பூதமாக முனிஸ்காந்த்
பூதத்திற்கு உரித்தான சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருக்கிறார்.

காமெடிக்கு பஞ்சம் இருக்காது
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஃபேன்டஸி ஜானரில் உருவாகிவரும் "ஆலம்பனா" படத்தில் நடிகர் பார்வதி நாயர் நாயகியாக நடிக்க ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசை இசையமைக்கிறார் . நடிகர் முனிஸ்காந்த்தின் காமெடிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்க இப்பொழுது பூதம் அவதாரம் எடுத்திருக்கும் ஆலம்பனா படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











