விஜய் சேதுபதி தயாரிப்பில் "யாருக்கும் அஞ்சேல்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
சென்னை : சென்ற ஆண்டு வெளியான இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் யாருக்கும் அஞ்சேல்.
நடிகர் விஜய்சேதுபதி தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் நடிகை பிந்துமாதவி நடிப்பில் உருவாகி வருகிறது என்ற தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இப்போது அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
பார்க்கும்போது எதிர்பார்ப்பை தூண்டும் அளவிற்கு வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களான மாஸ்டர், லாபம், மாமனிதன் உள்ளிட்ட திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் இப்பொழுது அவர் தயாரித்திருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

சூப்பரான திரில்லர்
சமீபகாலமாக ரத்தம் சொட்டச் சொட்ட பயங்கரமான திரில்லர் காட்சியுடன் உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதைத் தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியும் அதே பாணியில் ஒரு சூப்பரான திரில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

பிந்துமாதவி லீட் ரோலில்
இது வரை கண்டிராத புதிய பரிமாணத்தில் பிந்துமாதவி லீட் ரோலில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் ரத்தக்கறையுடன் பிந்துமாதவி நிற்க அவர் முன் ஒருவர் ரத்தம் சொட்டச் சொட்ட உறைந்தபடி செத்து கிடக்க அருகிலுள்ள சுவற்றிலும் பல ரத்தக் கறைகள் என ஒரே ரத்த வாடகையாக வெளியகி இருக்கும் இந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம்ம திரில்லர் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

காதல் ததும்பத்ததும்ப
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து "புரியாத புதிர் " என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில் தனது அடுத்த திரைப்படத்தை செம ரொமான்டிக் மூவியாக எடுத்திருந்தார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என பெயரிடப்பட்டு வெளியான இந்த காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் இருவரும் காதல் ததும்பத்ததும்ப நடித்திருக்க இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

விஜய் சேதுபதி தயாரிக்கிறார்
இந்நிலையில் தனது முதல் திரைப்படத்தை போலவே மூன்றாவது திரைப்படத்திலும் மீண்டும் திரில்லரை கையில் எடுத்திருக்கும் ரஞ்ஜித் ஜெயக்கொடி இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறார் , இந்த திரைப்படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறார்.

சூசகமான வாசகம்
மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் " அல்லவை வெல்ல நல்லவற்றின் அமைதி மட்டும் போதும்" என இந்த படத்தின் கதைச் சுருக்கத்தை சூசகமாக தெரிவிக்கின்றவாறு இடம்பெற்றுள்ள இந்த வாசகம் அனைவரையும் மிரள வைத்ததோடு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications