'ஷகீலா' பட ஃபர்ஸ்ட் லுக்கே இப்படின்னா, படம் பட்டையை கிளப்பும் போல

By Siva

Recommended Video

பிரபுதேவாவை காதலிக்கவில்லை- இந்துஜா | ஷகீலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்- வீடியோ

மும்பை: ஷகீலா வாழ்க்கை வரலாற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் சினிமா ரசிகர்களை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்த நடிகை ஷகீலாவின் வாழ்க்கை அவர் பெயரிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரிச்சா சட்டா ஷகீலாவாக நடித்துள்ளார்.

ஷகீலா

ஷகீலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிச்சா சட்டா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் அவர் தலை முதல் கால் வரை ஆபரணங்கள் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அவர் சாய்ந்திருக்கும் சுவரில் அவரை பற்றி கேவலமாக எழுதிய வாசகங்கள் உள்ளது. ஆனால் அதை எல்லாம் அவர் கண்டுகொள்வதாக இல்லை.

கவர்ச்சி

கவர்ச்சி

ஷகீலா சேச்சி படத்தில் கவர்ச்சி இல்லாமலா?. போஸ்டரிலேயே பட்டையை கிளப்பியுள்ளனர். படத்தில் எந்த அளவுக்கு கவர்ச்சி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தன் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஷகீலா கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். படம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸாக உள்ளது.

போஸ்டர்

போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஷகீலா- ஆபாச பட நடிகை அல்ல என்ற வாசகம் உள்ளது. ஷகீலா படத்தில் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளை ரிச்சாவின் காதலராக நடித்துள்ளார். ஷகீலாவின் வாழ்க்கையில் அவர் சந்தித்த கஷ்டங்கள், சந்தோஷம் என்று பல விஷயங்களை காட்டியுள்ளார்களாம். ஒரு காலத்தில் ஷகீலா படம் வந்தால் பெரிய நடிகர்களே தங்களின் படங்களை வெளியிட தயங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிச்சா

ரிச்சா

ஷகீலாவாக நடிக்க ரிச்சா சட்டாவை ஏன் தேர்வு செய்தார்கள், எந்த விதத்தில் ரிச்சா ஷகீலா போன்று இருக்கின்றார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வித்யா பாலன் நடித்தபோதும் இதே போன்று தான் விமர்சிக்கப்பட்டுது. ஆனால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனால் படம் வரட்டும் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X