நான்தான் டைட்டில் வின்னர்.. ஓவர் கான்ஃபிடன்ஸில் பாலாஜி.. வச்சு செய்யும் அர்ச்சனா அன்ட் டீம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக புதிய மனிதா என்ற தலைப்பில் ரோபோ வெர்சஸ் மனிதர்கள் என பிக்பாஸ் வீடு பிரிக்கப்பட்டது.

அர்ச்சனா தலைமையில் நேற்று 6 பேர் ரோபோக்களாக இருந்தனர். பாலாஜி தலைமையில் 6 பேர் மனிதர்களாக இருந்தனர்.

கண்ணீர் கதறல்

கண்ணீர் கதறல்

இந்த டாஸ்க்கில் அர்ச்சனா டீமை வச்சு செய்தது பாலாஜி டீம். இதில் கேபி, ஷிவானி அர்ச்சனா என மூன்று ரோபோக்களுக்கு உணர்ச்சிகளை வரவழைத்து தோற்கடித்தது பாலாஜி டீம். கண்ணீர் கதறல் என பெரும் களேபரங்களுடன் நேற்றைய டாஸ்க் நிறைவடைந்தது.

அர்ச்சனா டீம்

அர்ச்சனா டீம்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் அர்ச்சனா டீம் மனிதர்களாகவும் பாலாஜி டீம் ரோபோக்களாகவும் உள்ளனர். அர்ச்சனா டீம் 3க்கும் மேற்பட்ட ரோபோக்களை செயலிழக்க செய்ய வேண்டும் என்பதால் அவர்கள் தீயாய் வேலை செய்துள்ளது.

சிக்கிய பாலாஜி

சிக்கிய பாலாஜி

அப்போது கிச்சு கிச்சு மூட்டினால் பிரேக் ஆகிவிடுவோம். உங்களுக்கு தெரியும் என்கிறார் ரியோ. அதற்கு பதில் சொல்லும் ரம்யா, சோமை காட்டி இவருக்கு மட்டும் ஆஜித் பண்ணாரு என பற்ற வைக்கிறார். இதில் எடுத்த வேகத்திலேயே பாலாஜியை வச்சு செய்கிறது அர்ச்சனா டீம்.

நான்தான் டைட்டில் வின்னர்

நான்தான் டைட்டில் வின்னர்

முதல் ஆளாக பாலாவை கட்டம் கட்டும் ஷிவானி, பாலா ஏன் சிரிக்கிறீங்க என்றார். மேலும் பாலா சிரிச்சுட்டாரு அவுட் என்றும் அளப்பறை செய்கிறார். தொடர்ந்து சிரித்தப்படியே காமெடி பண்ணும் பாலா, நான் யார் தெரியுமா நான்தான் டைட்டில் வின்னர் என்று காமெடி செய்கிறார். இப்படியாக உள்ளது முதல் புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X