அப்போ இந்த வாரம் வெளியே போறது இவங்கதானா.. நாமினேஷனில் மொத்தமாய் வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் 7 பேர் நாமினேட் ஆன நிலையில் நேற்று சம்யுக்தா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

அர்ச்சனா நாமினேஷன்

அர்ச்சனா நாமினேஷன்

அதன்படி கன்ஃபெஷன் ரூமில் ஹவுஸ்மேட்ஸ் சக ஹவுஸ்மேட்ஸ்களை ஒவ்வொரு காரணமாய் சொல்லி நாமினேட் செய்கின்றனர். அந்த வகையில் அர்ச்சனா சனம் ஷெட்டியை நாமினேட் செய்கிறார்.

பயமுறுத்துகிறார்

பயமுறுத்துகிறார்

ரம்யா, பாலாஜி, ஷிவானி ஆகியோர் ஆரியை நாமினேட் செய்கின்றனர். ஆரியை நாமினேட் செய்யும் ரம்யா, சிரித்துக்கொண்டே அவருடைய கோப வெளிப்பாடு எதிரில் உள்ள நபரை பயமுறுத்துவது போல் உள்ளது என்று காரணம் கூறுகிறார்.

ரொம்ப காயப்படுத்துகிறார்

ரொம்ப காயப்படுத்துகிறார்

அவரை தொடர்ந்து ரியோ, நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் ரம்யாவை நாமினேட் செய்கின்றனர். ரம்யா சிரித்துக் கொண்டே சில பேரை ரொம்ப காயப்படுத்துவதாக காரணம் கூறுகிறார் ரமேஷ்.

பாலாஜியின் ஷேடோ

பாலாஜியின் ஷேடோ

அடுத்து அர்ச்சனா, கேபி, ஆரி, ஆஜித் ஆகியோர் ஷிவானியை நாமினேட் செய்கின்றனர். ஷிவானி எப்போதும் பாலாவின் ஷேடோவிலேயே இருப்பதாக காரணம் கூறுகிறார் அர்ச்சனா. முதல் புரமோவின் படி, இந்த வார நாமினேஷனில் ஷிவானி, ரம்யா, ஆரி ஆகியோர் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

பாலாஜி ஆராய்ச்சி

பாலாஜி ஆராய்ச்சி

ஷிவானியின் பெயரை ஹவுஸ் மேட்ஸ் கன்ஃபெஷன் ரூமில் நாமினேட் செய்து கொண்டிருந்த போது, பாலாஜி ஷிவானியின் காதுக்கு பின்னால் எதையோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஷிவானி பாலாஜியை தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லை என்ற நிலையில் இந்த காட்சியும் கூடுதல் வலு சேர்த்துள்ளது.

எபிசோடில் தெரியும்

எபிசோடில் தெரியும்

இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற கால் சென்டர் டாஸ்க்கில் வாடிக்கையாளர்களாய் இருந்த போட்டியாளர்கள் சிலரும் நேரடியாக நாமினேட் ஆனார்கள். இந்நிலையில் புரமோவின் படி மூன்று பேர் நாமினேட் ஆகியுள்ள நிலையில் மொத்தம் எத்தனை பேர் நாமினேட் ஆகப் போகிறார்கள் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

பட்டியலுக்கு வருவார்களா?

பட்டியலுக்கு வருவார்களா?

கால் சென்டர் டாஸ்க்கில் நாமினேட் ஆனவர்களின் நாமினேஷன் புராசஸ் தள்ளி வைக்கப்படுவதாக கடந்த வாரமே அறிவித்துவிட்டார் பிக்பாஸ். ஆகையால் அவர்கள் இந்த வார நாமினேஷனில் இடம்பெறுவார்களா அல்லது மொத்த டாஸ்க்கும் முடிந்த பிறகுதான் பட்டியலுக்கு வருவார்களா என்பதும் நிகழ்ச்சியில் தெரியவரும்.

காப்பாற்றப்படுவாரா?

காப்பாற்றப்படுவாரா?

இந்நிலையில் ஷிவானி, ஆரி, ரம்யா ஆகியோர் மட்டுமே நாமினேஷனில் இடம்பெற்றுள்ள நிலையில் ஆரிக்கும் ரம்யாவுக்கும் நல்ல ஃபேன் பேஸ் உள்ளதால் அவர்கள் தப்பித்து விடலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஷிவானி பாலாஜி காதல் கன்டென்ட்டுக்கு கை கொடுப்பதால் அவர் காப்பாற்றப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 யார் வெளியேறுவார்?

யார் வெளியேறுவார்?

அதே நேரத்தில் ஜித்தன் ரமேஷ், நிஷா, சோம சேகர், அர்ச்சனா போன்ற வேறு யாராவது நாமினேஷனில் இடம் பெற்றால் அவர்களுக்கு ஆபத்துதான் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இன்றைய இரவு எபிசோடில் இந்த வாரம் நாமினேட் ஆகப்போகிறவர்கள் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X