நான் அந்தளவுக்கு கேவலமானவன் இல்ல.. ஆவேசமான ரியோ.. மீண்டும் நாமினேஷனில் ஆரி?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ மூலம் பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் எவிக்ஷன் புராசஸுக்கான நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இன்றும் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது இன்றைய முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது.

மீண்டும் ஓபன் நாமினேஷன்

மீண்டும் ஓபன் நாமினேஷன்

அதன்படி பிக்பாஸ் வீட்டில் மூன்றாவது முறையாக ஓபன் நாமினேஷன் புராசஸ் நடைபெறுகிறது. இதற்காக ஹவுஸ்மேட்ஸ் லிவிங் ஏரியாவில் உள்ள பிளாஸ்மா முன்பு வந்து நின்று சக ஹவுஸ்மேட்ஸ் இருவரை நாமினேட் செய்கின்றனர்.

ரியோ நாமினேட்டட்

ரியோ நாமினேட்டட்


இதில் முதலில் நாமினேட் செய்யும் ஆரி, ரியோவின் பெயரை சொல்கிறார். அதற்கு காரணமாக தனக்கும் பாலாவுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் குறித்து ரியோ பேசியதையும் அதற்கு தான் விளக்கம் கேட்டேன் அதிலும் எனக்கு முழு திருப்தியில்லை என்று கூறினார்.

ஆரி வார்த்தையை விட்டார்

ஆரி வார்த்தையை விட்டார்

அதனை தொடர்ந்து வரும் சோம் முதலில் எல்லோரையும் க்ளாப் பண்ண சொல்கிறார். பின்னர் பாலாவையும் ஆரியையும் நாமினேட் பண்ணும் சோம், ஆரி கோபத்தில் சில வார்த்தைகளை விட்டுள்ளார், அதை தவிர்க்க வேண்டும். இங்கே மட்டும் இல்ல வெளியேவும்தான் என காரணம் கூறுகிறார்.

கேவலமானவன் இல்ல

கேவலமானவன் இல்ல

அடுத்து வரும் ரியோ, பொண்ணு வரும் போது கூட அந்த மனுஷன் அப்படி ரூல்ஸ ஃபாலோ பண்ணியிருக்காரு. இவன் அதை பார்க்காம இதை போய் சொல்லியிருக்கானேன்னு நான் ஒரு இடத்துல தப்பா தெரியருதுக்கு வாய்ப்பு இருக்கு. நான் அந்தளவுக்கு கேவலமானவன் இல்ல என்கிறார்.

நாமினேஷன் லிஸ்ட்

நாமினேஷன் லிஸ்ட்

ஆனால் ரியோ யாரை நாமினேட் செய்கிறார் என்பது தெரியவில்லை. இருந்த போதும் அவர் ஆரியை நாமினேட் செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த வாரம் ஆரி நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறலாம் என தெரிகிறது.

கேப்டனும் லிஸ்ட்டில்

கேப்டனும் லிஸ்ட்டில்

மேலும் பிக்பாஸ் வீட்டில் இந்தவார கேப்டனாக ரியோ தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை என்பதும் அவரை சக ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்வதும் இன்றைய முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X