எதிர்பார்த்த மாதிரியே அந்த போட்டியாளர் நாமினேஷன் லிஸ்ட்டுக்கு வந்துட்டாங்க.. பிக்பாஸின் முதல் புரமோ!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் நடைபெறுவது இன்றைய முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமை எபிசோடுகளில் நாமினேஷன் நடைபெறுவதும், ஞாயிற்றுக் கிழமை எபிசோடுகளில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தீபாவளி கொண்டாடப்பட்டதால் எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் ஹவுஸ்மெட்ஸ் சந்தோஷமாய் தீபாவளியை கொண்டாடினர்.

நாமினேஷன் புராசாஸ்

நாமினேஷன் புராசாஸ்

இந்நிலையில் இந்த வாரம் நிச்சயம் எலிமினேஷன் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

சிடுமூஞ்சி மேக்ஸ்

சிடுமூஞ்சி மேக்ஸ்

அதன்படி அர்ச்சனா, நிஷா, ரியோ மற்றும சம்யுக்தா ஆகிய நான்கு பேரும் அனிதா சம்பத்தின் பெயரை நாமினேட் செய்கின்றனர். அனிதாவை நாமினேட் செய்யும் சம்யுக்தா அதற்கான காரணமாக, அனிதா சிடுமூஞ்சி மேக்ஸ் என கூறுகிறார்.

என்ன மூடுன்னு தெரியல

என்ன மூடுன்னு தெரியல

அவரை தொடர்ந்து சுச்சியை ஷிவானி, ரம்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். சுச்சியை நாமினேட் செய்யும் காரணமாக, அவர் எப்போது என்ன மூடில் இருக்கிறார் என்றே தெரியவில்லை என்று கூறுகின்றார்.

காதல் கண்ண மறைக்குது

காதல் கண்ண மறைக்குது

பாலாஜியின் பெயரை ஆரியும் சோம சேகரும் நாமினேட் செய்கின்றனர். அப்போது பாலாவை நாமினேட் செய்வதற்கான காரணமாய், பாலாவின் காதல் அவரது கண்ணை மறைப்பதாக கூறுகிறார்.

4 பேர் நாமினேஷனில்..

4 பேர் நாமினேஷனில்..

ஆரியின் பெயரை பாலாஜியும் ஆஜித்தும் நாமினேட் செய்கின்றனர். முதல் புரமோவின்படி அனிதா, சுச்சி, பாலாஜி, ஆரி ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

கடுப்பில் ரசிகர்கள்

கடுப்பில் ரசிகர்கள்

ஏற்கனவே கமல் மீது குற்றச்சாட்டுக்களை கூறியது அவர் ஒரு சார்பாக நடந்துகொள்கிறார் என விமர்சித்தது மற்றும் ஹவுஸ்மெட்ஸிடம் சண்டைபோடுவது போன்ற விஷயங்களால் அனிதா சம்பத் மீது ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

வச்சு செய்யலாம்

வச்சு செய்யலாம்

அவர் நாமினேஷன் லிஸ்ட்டுக்கு வந்தால் அவரை வெளியேற்றுவது உறுதி என கூறி வருகின்றனர். இந்நிலையில் அனிதா நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதை பார்த்த ரசிகர்கள் அவரை வச்சு செய்யலாம் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X