மீண்டும் குறி வைத்த ரியோ, ரம்யா.. இந்த வாரமும் நாமினேஷனுக்கு வந்த ஆரி.. பீதி கிளப்பும் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று வழக்கம் போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

ரகசிய நாமினேஷன்

ரகசிய நாமினேஷன்

கடந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்ற நிலையில் இந்த வாரம், கன்ஃபெஷன் ரூமில் ரகசியமாக நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் முதல் நபராய் கன்ஃபெஷன் ரூமுக்குள் வரும் சோம் ஷிவானி மற்றும் ஆஜித்தை நாமினேட் செய்கிறார்.

அனிதா நாமினேஷன்

அனிதா நாமினேஷன்

மேலும் பாலாவை நம்பிதான் அவர்கள் விளையாடுவதாக காரணம் சொல்கிறார் சோம். அடுத்து வரும் பாலாஜி சோமை நாமினேட் செய்வதாக கூறுகிறார். அவரை தொடர்ந்து கன்ஃபெஷன் ரூமுக்கு வரும் அனிதா, ஆஜித் மற்றும் ஷிவானியை நாமினேட் செய்கிறார்.

ஆரிக்கு குறி..

ஆரிக்கு குறி..

இதுவரைக்கும் அவர்கள் நிகழ்ச்சியில் என்ன பண்ணியிருக்கிறார்கள் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை என்று கூறுகிறர் அனிதா. அடுத்த வரும் ஷிவானி, ரம்யா, ரியோ ஆகியோர் ஆரியை நாமினேட் செய்கின்றனர்.

ரம்யா புகார்

ரம்யா புகார்

தொடர்ந்து பேசும் ரம்யா, ஆரி ஹவுஸ்மேட்ஸுடன் பல விஷயங்களுக்கு ஒத்துப் போவதில்லை என்று கூறுகிறார். கேபி மற்றும் ஆஜித் ஆகியோர் அனிதாவை நாமினேட் செய்கின்றனர்.

நாமினேஷன் லிஸ்ட்டில்

நாமினேஷன் லிஸ்ட்டில்

ரம்யா இரண்டாவது நபராய் கேபியை நாமினேட் செய்கிறார். ஆரி, கேபி மற்றும் ஷிவானி ஆகிய இருவரை நாமினேட் செய்கிறார். முதல் புரமோவின் படி இந்த வார நாமினேஷனில் ஆரி, அனிதா, ஷிவானி, கேபி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X