ஆஹா.. முதல் ஓபன் நாமினேஷன்.. அனல் பறக்கும் ஆர்க்யூமென்ட்.. ஆரியை நாமினேட் செய்த அர்ச்சனா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விட்டது. இதுவரை 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Recommended Video

சென்னை: அப்பீட்டான அறந்தாங்கி நிஷா.. அழுகாச்சி காவியமான பிக்பாஸ்.. புலம்பும் ரசிகர்கள்..!

இதுவரை இல்லாத விதமாக கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் டபுள் எவிக்ஷனாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று வழக்கம் போல் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறுகிறது. ஆனால் இம்முறை ஓபன் நாமினேஷன் நடைபெறுவது இன்று வெளியான முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது.

ஓபன் நாமினேஷன்

ஓபன் நாமினேஷன்

இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷனாக இந்த நாமினேஷன் உள்ளது. இதில் அனைத்து ஹவுஸ்மேட்ஸும் லிவிங் ஏரியாவில் அமர்ந்துள்ளனர். அப்போது ஒவ்வொரு ஹவுஸ்மேட்டாய் சக ஹவுஸ்மேட்ஸ் இருவரை நாமினேட் செய்கின்றனர்.

காத்திருந்தேன்..

காத்திருந்தேன்..

அதன்படி முதலில் பேசும் பாலாஜி, ரொம்ப நாளாய் இந்த ஓபன் நாமினஷேனுக்கு காத்திருந்தேன் என்று கூறுகிறார். தொடர்ந்து ரியோவை நாமினேட் செய்கிறார் பாலாஜி. அதற்காக அவர் கூறும் காரணத்தை ரியோ ஏற்கவில்லை என தெரிகிறது.

தவறாக புரிந்து..

தவறாக புரிந்து..


இதனால் பாலாஜிக்கு பதிலளிக்கும் வகையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனை பார்த்த பாலாஜி, நாம் சொல்வதை எப்போதும் தவறாக புரிந்து கொண்டு தவறா பதில் சொல்றதால் நான் ரியோவை நாமினேட் செய்கிறேன் என்று கூறுகிறார்.

லிஸ்ட்டில் ரியோ

லிஸ்ட்டில் ரியோ

தொடர்ந்து ஆரி, அனிதா மற்றும் ரம்யா ஆகியோரும் ரியோவை நாமினேட் செய்கின்றனர். ஏற்கனவே ஆரி மீது செம காண்டில் இருக்கும் அர்ச்சனா ஆரியை நாமினேட் செய்கிறார். புரமோவின்படி ரியோ நாமினேஷனில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

யார் யார் நாமினேஷன்?

யார் யார் நாமினேஷன்?

இதேபோல் ஆரி, அனிதா ஆகியோரும் இந்த வார நாமினேஷனில் இடம்பிடிப்பார்கள் என தெரிகிறது. இன்றைய எபிசோடில்தான் யார் யார் நாமினேட் ஆகிறார்கள் என்பது தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X