டிக்கெட் டூ ஃபினாலே 7வது டாஸ்க்.. பாலாஜியிடம் தோற்றாரா ஆரி.. அதிரடி புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த வாரம் ஃபினாலே வாரமாக இருக்க போகிறது.
பிக்பாஸ் வீட்டில் இதுதான் கடைசி வாரம் என்பதால் அனைத்து போட்டியாளர்களுமே எவிக்ஷன் புராசஸுக்கான நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர்.

டிக்கெட் டூ ஃபினாலே
இந்நிலையில் நாமினேஷனில் இருந்து ஒரு போட்டியாளரை காப்பாற்றி ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக கொண்டு செல்லும் வகையில் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

7வது டாஸ்க்..
இதில் இதுவரை 6 டாஸ்க்குகள் நிறைவடைந்த நிலையில் இன்று 7 வது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் மற்ற ஹவுஸ்மேட்ஸுடன் போட்டியிட வேண்டும்.

வேகமாக செய்யும் போட்டியாளர்
பங்கேற்கும் இரண்டு போட்டியாளர்களும் ஒரு பக்கத்தில் வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ள பந்துகளை தரையில் உருண்டப்படி எடுத்து மற்றொரு பக்கத்தில் வைக்க வேண்டும். இதனை வேகமாக செய்யும் போட்டியாளரே வெற்றியாளர்.

பாலாஜியும் ஆரியும்
இதில் கேபியும் சோமும் ஒரே நேரத்தில் விளையாடி முடிக்கின்றனர். இதனால் மூன்றாவது அம்பயர் செக் செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார் பிக்பாஸ். அடுத்து பாலாஜியும் ஆரியும் ஒன்றாக பங்கேற்கின்றனர்.

தோற்றாரா ஆரி?
இதில் ஒருக்கட்டத்தில் பாலாஜி, வேகமாக தனது பந்துகளை ஒரு வளையத்தில் இருந்து மற்றொரு வளையத்தில் கொண்டு சென்று வைக்கிறார். இதனால் ஆரி பாலாஜியிடம் தோற்றாரா? பாலாஜி, ஆரியிடம் தோற்றாரா என்பது இன்றைய எபிசோடிலேயே தெரியவரும்.


Click it and Unblock the Notifications











