twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜனவரி டு ஏப்ரல்.. 2020ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள்.. டாப் லிஸ்டில் பிரியங்கா, சன்னி லியோன்!

    |

    மும்பை: 2020ம் ஆண்டின் முதல் கால் இறுதி முடிவுக்கு வந்துள்ளது. இந்த தருணத்தில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் பிரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

    Recommended Video

    Vj Priyanka Live Singing | குண்டா இருக்கிறது என் இஷ்டம் | Lock Down Diaries

    ஆண்டுதோறும் கூகுள் தேடல் உள்ளிட்ட பல இணைய தேடல்களில் யார் டாப் என்ற பட்டியல் வருவது வழக்கம்.

    லாக்டவுன் காரணமாக முதல் காலாண்டில் யார் டாப் என்றும், ரசிகர்கள் யாரை அதிகம் தேடி பார்த்துள்ளனர் என்ற கருத்துக் கணிப்பை SEMrush என்ற நிறுவனம் நடத்தியிருக்கிறது.

    வாவ் அற்புதம்! லாக்டவுனில் கற்கும் ஹீரோயின்கள்.. மஞ்சு வாரியர் திறமை கண்டு வியந்த கீர்த்தி சுரேஷ்வாவ் அற்புதம்! லாக்டவுனில் கற்கும் ஹீரோயின்கள்.. மஞ்சு வாரியர் திறமை கண்டு வியந்த கீர்த்தி சுரேஷ்

    முதலிடத்தில்

    முதலிடத்தில்

    அதில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தில் உள்ளார். சராசரியாக 39 லட்சம் தடவைக்கு மேல் அவர் தேடப்பட்டு இருக்கிறார். பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, கொரோனா வைரஸ் குறித்தும், அதில் இருந்து மனித சமூதாயம் நிச்சயம் மீண்டு வரும் என பதிவிட்டு இருந்தது அதிகப்படியான மக்களை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சன்னி லியோன்

    சன்னி லியோன்

    கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக கூகுள் தேடலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்த கவர்ச்சி நடிகை சன்னி லியோனை கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் பிரியங்கா சோப்ரா பின்னுக்குத் தள்ளி உள்ளார். ஆனாலும், 31 லட்சத்திற்கும் அதிகமாக சன்னி லியோனை கடந்த 4 மாதங்களில் இளைஞர்கள் தேடிப் பார்த்துள்ளனர்.

    சல்மான் கான்

    சல்மான் கான்

    பாலிவுட்டின் வசூல் மன்னனான சல்மான் கானை இணையத்தில் சுமார் 21 லட்சம் முறை நெட்டிசன்கள் தேடிப் பார்த்துள்ளனர். அவரை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் விராத் கோலியை 20 லட்சம் முறையும், ஹிரித்திக் ரோஷனை 13 லட்சம் தடவையும் இந்த இணைய உலகம் தேடி இருக்கிறது.

    அடுத்தடுத்த இடத்தில்

    அடுத்தடுத்த இடத்தில்

    19 லட்சம் முறை பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை இணைய வாசிகள் தேடி இருக்கின்றனர். அவரை தொடர்ந்து இந்த டாப் பிரபலங்கள் பட்டியலில் நடிகர் ஷாருக்கான், டைகர் ஷெராஃப், விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு உள்ளிட்ட நடிகர்களும், தீபிகா படுகோனே, திஷா பதானி, ஆலியா பட், சாரா அலி கான், கரீனா கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளும் இடம்பிடித்துள்ளனர்.

    ஒரே டிவீட்

    ஒரே டிவீட்

    கொரோனா வைரஸ் குறித்த தீவிரத்தையும், விழிப்புணர்வையும் முதன்முறையாக நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்கள் மத்தியில் தெரிவித்து பதிவிட்ட அந்த ஒரே ஒரு டிவீட்டை 1.3 மில்லியன் ரசிகர்கள் அதிகப்படியாக பார்த்துள்ளனர். 20 ஆயிரம் முறைக்கு மேல் அதனை ரீடிவீட்டும் செய்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்து இருக்கிறது.

    நடிகைகளே

    நடிகைகளே

    மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதம் பெறுவது போல, வழக்கம் போல இந்த முறையும் நடிகைகளே இணைய தேடலில் முதலிடத்தை பிடித்துள்ளனர். பின்னுக்குத் தள்ளப்பட்ட நடிகை சன்னி லியோன் மீண்டும் கவர்ச்சி கடலில் இறங்கி ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை சம்மர் ஸ்பெஷல் போட்டோக்களை பதிவிட்டது தான் அவர் டாப் 2 இடத்திற்கு வர காரணமாக அமைந்துள்ளது.

    English summary
    Priyanka Chopra Jonas, Sunny Leone and Katrina Kaif are the most widely sought Indian women celebrities globally when it comes to online searches, according to a new survey.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X