சூர்யா41 படத்தோட சூட்டிங் பத்தி சூப்பர் அப்டேட் வெளியிட்ட படக்குழு... என்னன்னு பாருங்க!

கன்னியாகுமரி : நடிகர் சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் சூர்யா41. 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் சூர்யா மற்றும் பாலா இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் துவங்கிய நிலையில், நீண்ட இந்த முதல்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் மற்றும் சமீபத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படங்கள் விமர்சனரீதியாக சிறப்பான படங்களாக அமைந்துள்ளன. முந்தைய இரு படங்களும் நேரடியாக ஓடிடியில் ரிலீசான நிலையில் 3 ஆண்டுகள் கழித்து எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் ரிலீசானது.

50 நாட்களை கடந்த சூர்யா படம்

50 நாட்களை கடந்த சூர்யா படம்

தற்போது எதற்கும் துணிந்தவன் படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ளார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

சூர்யா 41 படம்

சூர்யா 41 படம்

நந்தா, பிதாமகன் படங்கள் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது சூர்யா 41 படத்தில் பாலாவின் இயக்கத்தில் இணைந்துள்ளது குறித்து சூர்யா மிகுந்த உற்சாகத்தை தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை அவரது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்து வருகிறது.

35 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு

35 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு

முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கப்பட்டு கடந்த 35 நாட்களாக ஒரே கட்டமாக கன்னியாகுமரியில் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த முதல்கட்ட படப்பிடிப்பு நாளைய தினம் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வேறு மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் மும்பை பயணம்

சூர்யாவின் மும்பை பயணம்

இந்தப் படத்தின் சூட்டிங்கின் இடையில் சில தினங்களுக்கு முன்பு சூர்யா, மும்பைக்கு பயணமானார். இதன் விமானநிலைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கின் பூஜைக்காக அவர் மும்பை சென்றது தெரியவந்தது. இந்தப் படத்தை அவர் தயாரிக்கவுள்ள நிலையில் அக்ஷய் குமார் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X