தளபதியின் பீஸ்ட் பட அப்டேட்… விரைவில் முதல் பாடல் ரிலீஸ்

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட்.

இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டிற்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் படத்தின் பாடல் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய்

தளபதி விஜய்

தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்தையடுத்து இவரது நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த மாதத்திற்குள் படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அடுத்தடுத்த அறிவிப்புகள்

அடுத்தடுத்த அறிவிப்புகள்

விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள், அப்டேட்டுகளுக்காக காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், அதன் மற்ற படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் போதெல்லாம் தளபதி படத்தின் அப்டேட் கேட்டு அவர்கள் தொடர்ந்து ட்வீட் செய்து வருகின்றனர்.

படத்தின் போஸ்டர்

படத்தின் போஸ்டர்

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் ஒன்றை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வெளியிட்டிருந்தார். அதில் நடிகர் விஜய் டிரம்ஸ் வாசிக்கும்படியாக காணப்படுகிறார். அவரை சுற்றி படத்தின் மற்ற நடிகர்கள் உற்சாகமான போஸ்களில் காணப்பட்டனர்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

இந்தப் போஸ்டர் விஜய் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. படத்திற்காக அதன் ரிலீசுக்காக காத்திருக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாடல் வெளியீடு?

முதல் பாடல் வெளியீடு?

இதனிடையே, படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் படத்தின் முதல் பாடல் என்று அந்த போஸ்டரில் காணப்படுகிறது. இந்த போஸ்டர் சமீபத்தில் வெளியான போஸ்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாயகி பூஜா ஹெக்டே

நாயகி பூஜா ஹெக்டே

படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. இவர்களை கொண்டு சென்னையில் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மேலும் ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படத்தில் ராணுவ அதிகாரியாக விஜய் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X