Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஹிப்ஹாப் தமிழாவின் சிவக்குமாரின் சபதம்... விரைவில் சிங்கிள் ட்ராக் வெளியீடு
சென்னை : ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் அடுத்த படம் சிவக்குமாரின் சபதம்
இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
ஒரே கான்செப்ட்டில் வெளியான படங்கள்.. இளம் யூட்யூபர் அஷ்வினின் அலசல்!
விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.
ஹிப்ஹாப் தமிழா
மீசையை முருக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் படங்களின் மூலம் தன்னை கோலிவுட்டின் சிறப்பான ஹீரோவாகவும் அடையாளப்படுத்தியுள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. தன்னுடைய அதிரடியான இசையின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
மீண்டும் இயக்குநர்
இந்நிலையில் இவர் நாயகனாக நடிக்கும் அடுத்த படம் சிவக்குமாரின் சபதம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா.
முடிவடைந்த சூட்டிங்
இந்த படத்தில் நாயகனாகவும் நடித்துள்ள அவர் முதல் பிரதி அடிப்படையில் சத்ய ஜோதி பிலிம்சுடன் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இந்த படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில் படத்தின் சூட்டிங் முடிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவிப்பு
தற்போது திங்க் மியூசிக்குடன் கைகோர்த்துள்ளதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டு, விரைவில் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.