அண்ணனுக்கு காதல் தோல்வி... தம்பி கார்த்திக்கு ரொமாண்டிக் சாங்.. ஓரவஞ்சனையா இருக்கே பாஸ்!
சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
காதலர் தினமான இன்று திரை பிரபலங்கள் பலரும் தங்களது காதலர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அதேபோன்று புது படத்தின் அப்டேட் குறித்த செய்திகளும் வெளியாகி வருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் கண்ணாடி பூவே பாடல் ரசிகர்களை மனதை உருக வைத்துள்ளது. காதலர் தினத்தில் காதல் தோல்வி பாடலை ரசிகர்கள் கேட்டு ரசித்து வருகின்றனர்.

அதே போன்று சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படத்தின் 'உயிர் பத்திக்காம' என்ற பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அரசியல் நகைச்சுவை: சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படம் முழுக்க முழுக்க பொலிட்டிக்கல் சட்டையர் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூது கவ்வும் படத்தை போன்று இப்படத்திலும் டார்க் க்யூமர் காமெடி காட்சிகளும், அரசியல் நைய்யாண்டிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றனர்.
எம்ஜிஆர் ரசிகனாக கார்த்தி: வா வாத்தியார் படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக வருகிறார். எம்ஜிஆரை போன்று உடை அணிவதும், வாத்தியார் வழியில் சாட்டையை சுழட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக இவரது நடிப்பில் வெளியான மெய்யழகன் நல்ல விமர்சனங்களை பெற்றது. பலரும் இப்படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
உயிர் பத்திக்காம ஃபர்ஸ்ட் சிங்கிள்: காதலர் தினமான இன்று ரசிகர்களை கவரும் வகையில் வா வாத்தியார் படத்தில் இடம்பெற்றுள்ள உயிர் பத்திக்காம என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகிறது. ரசிகர்களுக்கு இனிமையான ஒரு காதல் மெலோடி பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தர இருக்கிறார். வா வாத்தியார் படம் குறித்த செய்தி வெளியானதில் இருந்தே இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் உயிர் பத்திக்காம பாடல் ரசிகர்களை பத்திக்க வைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
நலன் - சந்தோஷ் நாராயணன் காம்போ: சூது கவ்வும் படத்தில் இடம்பெற்ற பிஜிஎம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போன்று காதலும் கடந்து போகும் படத்தில் இடம்பெற்ற அக்கம் பக்கம் பார், ககபோ பாடல்கள் எவர்கிரீன் ஹிட்டாகவும் பலரது காதல் ரிங்டோனாகவும் ஒலித்தன. இயக்குநர் நலன் குமாரசாமி - சந்தோஷ் நாராயாணன் கூட்டணியில் 3வது படமாக வா வாத்தியார் உருவாகியிருப்பது மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு ஒரு அருமையான குதூகலமான இசை விருந்து காத்திருக்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ரெட்ரோ படத்தில் சூர்யாவிற்கும், வா வாத்தியார் படத்தில் கார்த்திக்கும் ஒரு காதல் விருந்துடன் இசையை பரிசாக அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











