twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெளியானது மாநாடு பாடல் சிங்கிள் டீசர்... வேற லெவல் வைரலாக்கிய சிம்பு ரசிகர்கள்

    |

    சென்னை : சிம்பு நடித்த அரசியல் த்ரில்லர் படமான மாநாடு கடந்த மாதம், ரம்ஜானை முன்னிட்டு ரிலீசாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.

    அச்சு அசலாய் எம்ஜிஆர்....வேற லெவல் மேக்அப்பில் கலக்கிய 'மொட்ட தாத்தா' அச்சு அசலாய் எம்ஜிஆர்....வேற லெவல் மேக்அப்பில் கலக்கிய 'மொட்ட தாத்தா'

    படத்தின் டீசர், பக்ரீத் பண்டிகையன்று நிச்சயம் வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் உறுதி அளித்துள்ளார். இதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக காத்திருந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நடிகர் உதயாவும் டப்பிங் பணிகள் ஏற்கனவே துவங்கி நடந்து வருவதாக தெரிவித்தார்.

    தியேட்டரில் தான் ரிலீஸ்

    படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதில் படக்குழு உறுதியாக உள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் பற்றிய அறிவிப்பை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டார்.

    இன்று சிங்கிள் டீசர்

    இன்று சிங்கிள் டீசர்

    இதைத் தொடர்ந்து படத்தின் முதல் சிங்கிள் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக படத்தின் ஹீரோ சிம்பு அறிவித்தார். இது சிம்புவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

    மெஹரிஜைல்லா சிங்கிள் பாடல்

    மெஹரிஜைல்லா சிங்கிள் பாடல்

    மெஹரிஜில்லா என பெயரிடப்பட்டுள்ள இந்த சிங்கிள் ரிலீஸ் பற்றி யுவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து யுவன் சங்கர்ராஜா ட்விட்டரில் ரெஹரிஜைல்லா பாடலின் சிங்கிள் டீசரை வெளியிட்டார். இதன் முழு பாடல் ஜுன் 21 அன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

    சிங்கிள் டீசருக்கே இத்தனை பார்வையா

    சிங்கிள் டீசருக்கே இத்தனை பார்வையா

    இந்த டீசர் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே யூட்யூப்பில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். வீக்கென்ட் கொண்டாட்டமாக இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளதாக யுவர்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இந்த பாடலை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அடுத்தடுத்த சிம்பு படங்கள்

    அடுத்தடுத்த சிம்பு படங்கள்

    வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்புவும், அவரது ரசிகர்ளும் அதிகம் காத்திருப்பது மாநாடு படத்திற்காக தான். இதைத் தொடர்ந்து பத்து தல படத்திலும் சிம்பு நடித்து வருகிறார்.

    Read more about: maanaadu youtube teaser
    English summary
    Maanaadu first single teaser released in youtube
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X