ஜனவரி 12 வலிமை ரிலீஸ்... முதல் ஆளாக கன்ஃபார்ம் செய்த தியேட்டர்
சென்னை : ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் ஹுமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் என்றால் சந்தேகமே இல்லாமல் அது அஜித் நடித்துள்ள வலிமை படம் தான். இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.

ஜனவரி 12 ரிலீஸ்
அதைத் தொடர்ந்து இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக ஜனவரி 12 ம் தேதி வலிமை படம் ரிலீசாகிறது என கூறப்பட்டு வருகிறது. வலிமை படத்தின் ரிலீசை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா உலமே எதிர்பார்ப்பது உறுதியாகி உள்ளது.

உறுதி செய்த தியேட்டர்
பல படங்களின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் கூட மாற்றப்படுகிறது. இருந்தாலும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள Ritz Banu Cinemas தியேட்டர், பொங்கலுக்கு தங்களின் தியேட்டரில் வலிமை ரிலீஸ் ஆவதை ரொம்ப அட்வான்சாக உறுதி செய்துள்ளது. இதற்காக தயாரிப்பாளருடன் அனைத்து நடைமுறை ஒப்பந்தங்களையும் முடித்து, கையெழுத்திட்டார்களாம்.

ரசிகர்கள் உற்சாகம்
தமிழ்நாட்டிலேயே பெரிய நடிகரின், பிரம்மாண்ட படத்தின் ரிலீசை கிட்டதட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அறிவித்துள்ள முதல் தியேட்டர் இது தானாம். இதனால் ஜனவரி 12 ல் வலிமை ரிலீசாவது உறுதியாகி உள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
Finaly our First Thala movie after Renovation !!
Get ready to create new records 🔥 pic.twitter.com/CdZMCZTGgP — Ritzy Banu Cinemas (BanuCinemas) November 28, 2021 '>
சாதனைக்கு தயாராகுங்கள்
இது தொடர்பாக அந்த தியேட்டர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், தல அஜித்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது என்பதை உறுதி செய்துள்ள தமிழகத்தின் முதல் தியேட்டர் எங்களுடையதுதான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. தியேட்டர் புதுபிக்கப்பட்ட பிறகு ரிலீசாகும் முதல் தல படம். புதிய சாதனை படைக்க தயாராகுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருமை தாங்கல
இந்த அறிவிப்பை தொடர்ந்து வலிமை டிக்கெட் புக்கிங்கும் துவங்கி விட்டதாம். மதுரை ஏரியாவில் தான் வலிமை படத்தின் டிக்கெட் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது மதுரை ரசிகர்களை கூடுதல் பெருமையும், உற்சாகமும் அடைய வைத்துள்ளது.

ஆச்சரியப்பட வைத்த அறிவிப்பு
வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள், ஃபஸ்ட் க்ளிம்ப்ஸ் போன்றவை மட்டுமே இதுவரை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள், டிரைலர் போன்றவை வெளியிடப்படுவதற்கு முன்பே படத்தின் டிக்கெட் ரிலீசை உறுதி செய்ததுடன், டிக்கெட் புக்கிங்கை மதுரை ஏரியா தியேட்டர் உறுதி செய்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











