மூத்த மகனுக்கு கூட இப்படி பண்ணலையே.. கடைக்குட்டி செல்லத்துக்காக முரளி மனைவி செய்த செயல்!

சென்னை: மறைந்த நடிகர் முரளிக்கு இன்னமும் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஜயகாந்தை போலவே தமிழ் சினிமாவில் கருப்பு தங்கமாக வெகுளியான நடிப்பால் அனைவரது உள்ளங்களிலும் முரளி நிறைந்திருக்கிறார். அவருடைய மகனான அதர்வா பானா காத்தாடி படத்தின் மூலம் 2010ம் ஆண்டு அப்பா உயிரிழந்த அதே ஆண்டில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அடுத்த படமான முப்பொழுதும் உன் கற்பனையே படத்தில் அமலா பால் ஜோடியாக நடித்தார். மூன்றாவது படமாக இயக்குநர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்து சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தினார். ஹன்சிகா, நயன்தாரா, ராஷி கன்னா, அனுபமா பரமேஸ்வரன் என ஏகப்பட்ட நடிகைகளுடன் அதர்வா நடித்துள்ளார்.

nesippaya akash murali murali wife

ஆனால், அவர் நடித்த படங்கள் எதுவுமே பெரியளவில் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான நிறங்கள் மூன்று படமும் அவருக்கு ஃபிளாப் படமாக அமைந்துவிட்டது. ஆனால், அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் செம ரோல் அவருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி இந்த பொங்கலுக்கு ஹீரோவாக அறிமுகமாகவுள்ள நிலையில், மகனுக்காக முரளியின் மனைவி செய்த காரியம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கப்பு முக்கியம் தம்பி: ஆகாஷ் முரளி தனது மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதி ஷங்கரை ஜோடியாக போட்டு நடித்துள்ள நேசிப்பாயா படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. தனது தம்பிக்காக மேடை ஏறி பேசிய அதர்வா உனக்காக ஒன்றே ஒன்று தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கப்பு முக்கியம் டா தம்பி என எப்படியாவது ஹீரோவாக வெற்றி பெற்றுவிடு என வாழ்த்தியுள்ளார்.

nesippaya akash murali murali wife

முதல் முறையாக மேடை ஏறிய முரளியின் மனைவி: நடிகர் முரளியின் தம்பி டேனியல் பாலாஜியின் மறைவுக்கு முரளியின் மனைவி ஷோபா வந்திருந்த போது தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீடியா வெளிச்சம் அவர் மீது பட்டது. இந்நிலையில், தனது 2வது மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாகும் நிலையில், நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் முதல் முறையாக முரளியின் மனைவி ஷோபா தனது கடைக்குட்டி செல்லத்துக்காக மேடை ஏறி பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

nesippaya akash murali murali wife

அதர்வா உருக்கம்: மேடை ஏறிய ஷோபா தன்னை ஏன் மேடையில் ஏற்றினாய் என அதர்வாவை செல்லமாக கடிந்துக் கொண்டு பேச வார்த்தையே வரவில்லை. ஆகாஷ் ஐ லவ் யூ டான்னு சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார். அதன் பின்னர் மைக்கை எடுத்துப் பேசிய அதர்வா முரளி, இவங்களை ஏன் மேடை ஏற்றினேன் என்றால், தன்னோட 2 பசங்களின் கனவுகளை தன் கனவாக சுமந்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் ஒரே ஜீவன் இவங்க தான். இவங்க இல்லைன்னா நாங்க இன்னைக்கு இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டோம் என உருக்கமாக பேசியுள்ளார். அதர்வாவுக்கு முதல் படம் நன்றாக அமைந்தது போல அவரது தம்பிக்கும் அமையுமா? பல முனை போட்டிகளுடன் வரும் அவர் தாங்குவாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X