முதல் முறையாக கமல் பற்றி பேசிய கவுதமி...அப்படி என்ன தான் சொன்னார் ?
சென்னை : கிட்டதட்ட 10 ஆண்டுகள் கமலுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த நடிகை கவுதமி, சில ஆண்டுகளுக்கு முன் பிரிவை அறிவித்தார். கமலிடம் இருந்து பிரிந்த பிறகு, பாஜக.,வில் இணைந்தார்.
நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் கவுதமி வேட்பாளராக நிறத்தப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதி அதிமுக.,விற்கு ஒதுக்கப்பட்டது.

தீவிர பிரசாரத்தில் கவுதமி
இதனால் தேர்தல் பிரசாரத்தில் மட்டும் ஈடுபட கவுதமி முடிவு செய்தார். தற்போது பாஜக.,வின் நட்சத்திர பேச்சாளராக கவுதமி செயல்பட்டு வருகிறார். கமலுடனான பிரிவிற்கு பிறகு அவரை கவுதமி இதுவரை எதுவும் பேசியதில்லை.

மார்க்கெட்டிங் யுக்திகள் பலிக்காது
இந்நிலையில் தற்போது கருத்து தெரிவித்துள்ள கவுதமி, மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல அது போல் எந்த கட்சி வந்து, மக்கள் மாற்றத்தை விரும்புவதாக எத்தனை மார்க்கெட்டிங் யுக்திகளையும் பயன்படுத்தலாம். அந்த யுக்திகள் சரியானவை தானா என தேர்தல் முடிவுகள் சொல்லும்.

எங்களுக்கு தான் சாதகம்
மக்கள் நீதி மய்யம் எந்த கட்சியின் ஓட்டுக்களை பிரிக்கும் என கேட்டதற்கு பதிலளித்த கவுதமி, கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் எதை செய்தாலும் அது பாஜக - அதிமுக கூட்டணிக்கு தான் சாதகமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

முடிந்து போன அத்தியாயம்
கமலுக்கும் தனக்குமான தனிப்பட்ட விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க கவுதமி மறுத்து விட்டார். தனது வாழ்க்கையில் அது முடிந்து போன அத்தியாயம் என்று மட்டும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











