ஏ.பி.சி.டி 2ல் வில்லனாக நடிக்கும் பிரபுதேவா!
டைரக்டர் பிரபுதேவா பாலிவுட் படம் ஒன்றில் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமான பிரபுதேவா ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார்.
இந்து, காதலன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த பிரபுதேவா, தமிழ், இந்தி படங்களை இயக்கி வருகிறார்.

ஆக்சன் ஜக்ஸன்
தற்போது அஜய்தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ‘ஆக்ஷன் ஜாக்ஸன்' படத்தை இயக்கி வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இப்படம் முடிந்ததும் அக்ஷய் குமார் நடிக்கும் ‘சிங் ஈஸ் பிளிங்' என்ற படத்தையும் இயக்குகிறார்.

டான்ஸ் படம்
நடிப்பை நிறுத்திக்கொண்டு படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வரும் பிரபுதேவா. நட்பு ரீதியாக ‘உருமி', ‘ஏபிசிடி' என இரண்டு படங்களில் நடித்தார்.

வில்லன் வேடம்
இதற்கிடையில் ‘ஏபிசிடி' இந்தி படத்தில் நடித்த பிரபுதேவா அடுத்து அதே பட குழு தமிழ் இந்தியில் தயாரிக்கும் ‘ஏபிசிடி பார்ட் 2'வில் நடிக்க உள்ளார். முதன்முறையாக வில்லன் வேடத்தில் இதில் தோன்றுகிறார். வருண் தவான், சாரதா கபூர் ஜோடியாக நடிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு ரிலீஸ்
‘ஏபிசிடி 2' படப்பிடிப்பு லாஸ்வேகாசில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பட குழுவினருக்கு விசா வராததால் டிசம்பர் மாதத்துக்கு பிறகு படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ரெமோ டிசோசா கூறி உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

களவாடிய பொழுதுகள்
தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபு தேவா தமிழில் நடித்து முடித்திருக்கும் ‘களவாடிய பொழுதுகள்' நீண்ட நாட்களாகவே ரிலீஸுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











