பிக் பாஸ் 3: போனதடவை அனந்த் வைத்தியநாதன்.. இந்த தடவை ‘இசை’ யாரு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3ல் நடிகர் மோகன் வைத்யாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

By Staff

Recommended Video

Bigg Boss Season 2: நீச்சல் உடையில் சுஜா செய்த காரியம்

சென்னை: பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ளப் போகும் இரண்டு முக்கிய பிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரும் ஞாயிறன்று பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களைப் போலவே இம்முறையும் நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்குகிறார் என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது.

ஆனால், போட்டியாளர்கள் விபரம் நிகழ்ச்சி ஒளிபரப்பு நாளன்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதனால், இவர் தான் போட்டியாளர், அவர் தான் போட்டியாளர் எனப் பலரது பெயர் ஊடகங்களில் அடிபட்டு வருகிறது.

 ஜாங்கிரி மதுமிதா:

ஜாங்கிரி மதுமிதா:

அந்தவகையில் ஜாங்கிரி மதுமிதா ஒரு போட்டியாளர் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார் என்ற செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவிக்காததே, அதற்கு முக்கியக் காரணம். ஆனால், அவர் நிஜமாகவே போட்டியாளரா என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பு நாளன்று தான் தெரியும்.

பாடகர் மோகன் வைத்யா:

பாடகர் மோகன் வைத்யா:

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் மற்றொரு போட்டியாளர் மோகன் வைத்யா என ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. பாடகர், நடிகர், இசைக்கலைஞர் என பன்முகத் திறமையாளரான மோகன் வைத்யா இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார் எனக் கூறப்படுகிறது. சேது, அந்நியன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் மோகன் வைத்யா.

அனந்த் வைத்தியநாதன்:

அனந்த் வைத்தியநாதன்:

கடந்த சீசனில் வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், அவரால் அந்த வீட்டில் நீடித்து இருக்க முடியவில்லை. மற்ற போட்டியாளர்களுடன் அவரால் சரிவர பழக முடியவில்லை. ஒருமுறை டேனியல் அவரை ‘இசை' எனக் கூறியதால், கோபப்பட்டு சண்டைகூட போட்டார்.

இம்முறை இசை:

இம்முறை இசை:

அந்தவகையில் இம்முறையும் இசைத் துறையைச் சேர்ந்த ஒருவர் பிக் பாஸ் போட்டியாளராகி இருப்பது மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த முறை அனந்த் பாடலால் பிக் பாஸ் வீடே இனிமையாக இருந்தது.இம்முறை மோகன் அந்த வேலையைச் செய்வார் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X