twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாங்க சுட்டதே எங்க அப்பாவோட ஃபர்ஸ்ட் பாட்ட தான்.. யுவன், வெங்கட் பிரபு சொல்லும் சுட்ட கதை!

    |

    சென்னை: அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி, தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா என்று ஆரம்ப காலத்திலேயே பல வெற்றி படங்களை கொடுத்தார்.

    ஏப்ரல் மாதத்தில், மௌனம் பேசியதே, காதல் கொண்டேன், பேரழகன், 7/ஜி ரெயின்போ காலனி என்று பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

    தனது அப்பாவான இளையராஜாவின் பாடலை மையமாக வைத்து தான் இசையமைத்த பாடலைப் பற்றி கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

    வானில் மறைந்த திரைமின்னல்.. சவுந்தர்யா பிறந்ததினம் இன்று.. நினைவுகூர்ந்த ரசிகர்கள்! வானில் மறைந்த திரைமின்னல்.. சவுந்தர்யா பிறந்ததினம் இன்று.. நினைவுகூர்ந்த ரசிகர்கள்!

    அன்று முதல் இன்று வரை

    அன்று முதல் இன்று வரை

    90களில் இருந்து இன்று வரை முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையமைத்த பாடல்கள் மட்டுமல்லாமல், பேக்ரவுண்ட் மியூசிக், பிஜிஎம் என்று அனைத்தும் வெற்றி பெற்று இப்போது முன்னணி இசையமைப்பாளர்களுல் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் இவர் இசையமைத்த பூவெல்லாம் கேட்டுப்பார், துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில், மௌனம் பேசியதே, காதல் கொண்டேன் போன்ற பல படங்கள் வேற லெவல் ஹிட்டானது.

    முன்னணி நடிகர்களுக்கு ஹிட்

    முன்னணி நடிகர்களுக்கு ஹிட்

    அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று இவர் பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த பாடல்கள் வெற்றி பெற்ற காரணத்தினால் பல படங்கள் வெற்றியான கதைகளும் உண்டு. இந்நிலையில் வெங்கட் பிரபு எழுதி, இயக்கிய சென்னை 600028 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலைப் பற்றியும், பாடல் உருவான கதையை பற்றியும் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளனர்.

    பிரபலமான 28

    பிரபலமான 28

    சென்னை 600028 படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜயலட்சுமி போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா பேக்ரவுண்ட் மியூசிக் பிரேம்ஜி அமரன், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "யாரோ யாருக்குள் இனி யாரோ" என்ற பாடல் தன் அப்பா இளையராஜாவின் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட டியூன் தான் என்று கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

    Recommended Video

    Aravindswamy | அரவிந்த்சாமிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு | Rewind Raja | *Kollywood
    கோழி கூவுது

    கோழி கூவுது

    1982 ஆம் ஆண்டு கங்கை அமரன் எழுதி, இயக்கிய திரைப்படமான கோழி கூவுது படத்தில் இடம்பெற்ற "ஏதோ மோகம், ஏதோ தாகம்" பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட டியூன் தான் "யாரோ யாருக்குள் இனி யாரோ" என்ற பாடலுக்கு பயன்படுத்தியதாக கூறியுள்ளனர் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு. மேலும் இவர்கள் கூறிய விஷயம் தான் ஹை லைட்"காபி அடிச்சாலும் யாருக்கும் தெரியாத மாதிரி அடிக்கணும்" என்று இருவரும் கூறியது அனைவரையும் வெகுவாக கவர்ந்துந்துள்ளது.

    English summary
    Firstly We have Copied our father Song Only Says Yuvan and Venkat Prabu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X