twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட "பிஷ் அன்ட் கேட்".. முதல்ல இதைப் படிங்க பாஸ்!

    By Manjula
    |

    சென்னை: ஹாலிவுட் திரைப்படங்களை விடவும் நல்ல படங்கள் மற்ற நாடுகளில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிரடி சண்டைக் காட்சிகளோ வன்முறைகளோ சிறிதும் இன்றி உண்மைக்கு மிக நெருக்கமாக எடுக்கப்பட்டு வரும் இத்தகைய படங்களின் மீது மற்ற நாடுகளின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.

    கொரியன் மற்றும் ஈரானியத் திரைப்படங்கள் சமீபகாலமாக மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. பெரிய அளவில் தொழில்நுட்பங்கள் எதையும் பயன்படுத்தி எடுக்காவிட்டாலும் கூட, இந்தத் திரைப்படங்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

    இந்த வரிசையில் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிஷ்& கேட் திரைப்படத்தைப் பார்க்கலாம். ஈரானிய இயக்குநர் ஷாரம் மோக்ரி ஒரே டேக்கில் எடுத்த படம் இது.

    உலகம் முழுவதும் 15 க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களை சந்தித்துப் பலரின் பாராட்டுகளையும், விருதுகளையும் ஒருசேர குவித்த படம் இது. விலங்குகள், பறவைகளுக்குப் பதில் மனிதர்களின் சதையை உணவகத்தில் சமைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் படத்தின் கதை.

    அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்

    அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்

    ஆரம்பமே ஒரு கொலையில் தான் தொடங்குகிறது, அந்த ஏரியாவில் நடந்த ஒரு கொலையைப் பற்றி மக்கள் பேசுவது போல படம் ஆரம்பிக்கின்றது. அடுத்தடுத்து பல பேர் வரிசையாக கொலை செய்யப்படுகின்றனர்.

    காணாமல் போகும் இளைஞர்கள்

    காணாமல் போகும் இளைஞர்கள்

    ஒரு ஏரி ஒன்றின் அருகில் உணவகம் ஒன்று இருக்கிறது, அந்த ஏரிக்குப் பக்கத்தில் இளைஞர்கள் கும்பலாக டென்ட் அடித்துத் தங்கி இருக்கின்றனர். அந்த ஊரில் நடக்கும் பட்டம் விடும் திருவிழாவிற்காக இளைஞர்கள் வந்திருக்கின்றனர், ஒவ்வொரு இளைஞரின் பார்வையிலும் படம் நகர்கிறது. அந்தக் கும்பலில் இருந்த இளைஞர்கள் திடீர்திடீரென்று காணாமல் போகின்றனர்.

    மனித சதையை சமைக்கும் உணவகம்

    மனித சதையை சமைக்கும் உணவகம்

    ஏரி அருகில் இருக்கும் உணவகத்தில் மனிதர்களைக் கடத்திக் கொன்று அவர்களின் சதையை சமைத்து விற்று வருகின்றனர். அதற்காக ஏரிக்கு அருகில் இருக்கும் மக்களைக் கொன்று விடுகின்றனர் உணவகத்தை நடத்துவோர்.

    கொலையில் தொடங்கி கொலையில் முடிகிறது

    கொலையில் தொடங்கி கொலையில் முடிகிறது

    கொலை செய்யப் பட்டவர்களைத் தவிர எஞ்சி இருப்பவர்கள் பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். கடைசியாக ஒரு பட்டம் விளக்குகளுடன் மேலே பறக்க, இங்கே ஒரு கொலை விழுவதுடன் படம் முடிகிறது.

    உண்மைக்கு அருகில்

    உண்மைக்கு அருகில்

    உண்மைக்கு மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட படமிது, இதே போன்று நிஜமான சம்பவம் ஒன்று நடந்து உலகையே உலுக்கியது. அந்த நிஜ சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்று இயக்குநர் இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.

    த்ரில்+ க்ரைம்

    த்ரில்+ க்ரைம்

    த்ரில்லும் கிரைமும் கலந்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் மிகக் குறைவான பாத்திரங்களே நடித்திருக்கின்றனர், படம் முழுவதையும் நகர்த்துவது பின்னணியும், இசையும் தான். 2 மணி நேரம் 14 நிமிடங்களைக் கொண்ட இந்தப் படத்தில் நடைபெறும் ஒவ்வொரு கொலைகளும், நம்மை சீட்டின் நுனிக்கே இழுத்துவந்து விடுகின்றன.

    உலகம் முழுவதும் 5 விருதுகள்

    உலகம் முழுவதும் 15க்கும் அதிகமான திரைப்பட விழாக்களைச் சந்தித்த இந்தத் திரைப்படம், இதுவரை 5 உலகளாவிய விருதுகளையும் வென்று இருக்கிறது. படம் பெர்சியன் மொழியில் எடுக்கப்பட்டு இருக்கிறது, படத்தைப் பார்க்க நினைப்பவர்கள் சப் டைட்டிலுடன் படத்தைப் பார்த்து பயப்படலாம்.

    English summary
    Fish & Cat – Iranian movie Directed by Shahram Mokri.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X