கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா.. படக்குழுவினர் அதிர்ச்சி.. படப்பிடிப்பு நிறுத்தம்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதேபோல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சர்காரு வாரி பாட்டா
தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைத்ராபாத்தில் தொடங்கியது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சோதனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழுவினர், படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே கொரோனா சோதனை மேற்கொண்டனர்.

படப்பிடிப்பு ரத்து
இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் படப்பிடிப்பை உடனடியாக ரத்து செய்துள்ளனர். இதனால் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த சக நடிகர் நடிகைகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர்.
Recommended Video

முழு ஊரடங்கு..
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கையாக இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











