நாளை சிம்பு படத்துடன் சேர்த்து 5 படங்கள் ரிலீஸ்
சென்னை: வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துடன் சேர்த்து நாளை 5 படங்கள் ரிலீஸாகின்றன.
இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு இனிதே துவங்கியுள்ளது. ஜனவரி 10ம் தேதி வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு பெரிய படங்களுமே அமோக வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ஒன்று அல்ல இரண்டு அல்ல 5 படங்கள் ரிலீஸாகின்றன.

வந்தா ராஜாவாதான் வருவேன்
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகிபாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நாளை ரிலீஸாக உள்ளது. அதிகாலை காட்சி 5 மணிக்கு திரையிடப்படுகிறது.

சர்வம் தாளமயம்
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள சர்வம் தாளமயம் படம் நாளை வெளியாக உள்ளது. ஜி. வி. பிரகாஷ் குமாரின் கெரியரில் இது முக்கிய படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

பேரன்பு
ராம் இயக்கத்தில் மம்மூட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த பேரன்பு படம் பிப்ரவரி 1ம் தேதி ரிலீஸாகிறது. தந்தை, மகள் இடையேயான பாசம் பற்றிய படம். தந்தை-மகள் பாசத்தை திரையில் காட்டுவதில் ராம் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

சகா
தீபக் நாராயணன் இயக்கத்தில் அரசு, டோனா சங்கர், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள பேய் எல்லாம் பாவம் படமும், முருகேஷ் இயக்கியுள்ள சகா படமும் நாளை வெளியாகின்றன. பேய் எல்லாம் பாவம் படத்தில் நடித்தபோது டோனாவுக்கும், இயக்குனர் தீபக்கிற்கும் இடையே காதலாகி திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











