கமலுடன் களத்தில் மோதும் 4 படங்கள்... ஜெயிப்பார்களா?

தமிழகத்தில் இன்று 5 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

Recommended Video

கமல் விஸ்வரூபத்துடன் மோதும் 4 படங்கள்...ஜெயித்தது யார்?- வீடியோ

சென்னை: கமலின் விஸ்வரூபம் 2 படம், பியார் பிரேமா காதல் உட்பட இன்று மொத்தம் ஐந்து படங்கள் ரிலீசாக இருக்கின்றன.

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீசாகிறது. கமலின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ரிலீசாகும் படம் என்பதால் இப்படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Five movies releasing in theaters today

இது தவிர, பிக் பாஸ் பிரபலங்களான ஹரீஷ் கல்யாண், ரைசா நடித்துள்ள பியார் பிரேமா காதல் படத்திற்கும் இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இரண்டு பெரிய படங்கள் தவிர இன்று, 3 ரசிகர்கள், காதல் எனக்குப் பிடிக்கும் மற்றும் அழகு மகன் என மேலும் மூன்று படங்கள் ரிலீசாகின்றன.

நேரடி தமிழ்ப்படங்களான இந்த ஐந்து படங்களுடன் ஹாலிவுட் படமான தி மெக் படமும் தமிழில் இன்று திரைக்கு வருகிறது.

விஸ்வரூபம் முதல் பாகம் வெற்றி என்பதால், இரண்டாம் பாகமும் நிச்சயம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதனுடன் தைரியமாக இன்று ரிலீசாகியுள்ள மற்ற நான்கு படங்களும் தாக்குப் பிடிக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

கடந்த வாரம் கஜினிகாந்த் படத்தையும் சேர்த்து மொத்தம் 10 படங்கள் ரிலீசாகின. அவற்றில் கஜினிகாந்த் மட்டுமே பெரிய பட்ஜெட் படம். மற்றவைகள் அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X