பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் இவர்கள் தான்.. எவிக்ட்டாக போறது இவரா?
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 5 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வாடிக்கை.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்ற நிலையில் இந்த வாரம் பழையப்படி கன்ஃபெஷன் ரூமில் ரகசிய நாமினேஷன் நடைபெற்றது.

அனிதா நாமினேட்டட்
அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற்றது. இதில் அனிதாவை ரியோ, கேபி மற்றும் ஆஜித் ஆகிய மூன்று பேரும் நாமினேட் செய்தனர். அனிதா மற்றவர்களை பார்த்து இன்ஃபுளுயன்ஸ் ஆகியிருப்பதாக ரியோ கூறினார்.

மாற்றி மாற்றி பேசுகிறார்
எல்லாவற்றுக்கும் கோப்படுகிறார், சண்டைபோடுகிறார், மாற்றி மாற்றி பேசுகிறார் என அனிதா மீதான குற்றச்சாட்டுக்களை கூறினார் கேபி. ஆஜித்தும் பாலா தங்களை முன்னிலைப்படுத்தி விளையாடுவதாக அனிதா கூறுவதை ஏற்க முடியாது என்று கூறினார்.

ஒத்துப் போவதில்லை
அடுத்து ஆரியை ரியோ, ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர் நாமினேட் செய்தனர். ஆரி சிலரின் நம்பிக்கையை உடைத்துவிட்டதாக கூறினார். ரம்யா, ஆரி தங்களுடன் ஒத்துப் போவதில்லை என்றும், பிளேம் கேம் ஆடுகிறார் என்றும் அவர் மட்டுமே நேர்மையாக இருப்பதாகவும் கூறினார். ஷிவானி, ஆரி தப்பான கமெண்ட் என்று தெரிந்தே அதை ஃபாலோ பண்ணி விளையாடுவதாகவும் கூறினார்.

என்ன பண்ணியிருக்காங்க?
அடுத்த ஷிவானியை கேபி, சோம், பாலா மற்றும் அனிதா ஆகியோர் நாமினேட் செய்தனர். கேபி, ஷிவானி எதிலும் கான்ட்ரிபுயூட் செய்வதில்லை என்றார. சோமும் பாலாவை நம்பியே ஷிவானி விளையாடுவதாக கூறினார். ஷிவானி ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டை காட்டவில்லை என காரணம் கூறினார். அனிதா, இதுவரை ஷிவானி இந்த வீட்டில் என்ன பண்ணியிருக்காங்கன்னு தெரியல, டாஸ்க்கில் பாலா ஹெல்ப்போடுதான் விளையாடுகிறார் என்றார்.

கேபி உணரவில்லை
தொடர்ந்து கேபியை ரம்யா, ஆரி மற்றும் பாலா ஆகியோர் நாமினேட் செய்தனர். கேபியிடம் லெஸ் இன்வால்வ் மென்ட் என்று காரணம் கூறினார் ரம்யா. இந்த பிக்பாஸ் வாய்ப்பை கேபி உணரவில்லை என்று கூறினார். கோபப்படுறது மட்டும் கேம் இல்லை என்று கேபியை நாமினேட் செய்து காரணம் கூறினார் பாலா.

5 பேர் லிஸ்டில்..
அடுத்து ஆஜித்தை சோம், ஷிவானி மற்றும் அனிதா ஆகியோர் நாமினேட் செய்தனர். ஷிவானி, ஆஜிதுக்கு தைரியம் இல்லை என்றும் அனிதா, ஆஜித் எப்போவாதுதான் பேசுகிறார் என்றும் கூறினார். மொத்தத்தில் இந்த வாரம் நாமினேஷனில் ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித், கேபி ஆகியோர் இடம் பிடித்தனர்.

அனிதாவின் ஆட்டியூட்
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி, ஆஜித் மற்றும் கேபி ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனிதா தேவையில்லாமல் ஆரி தனது குடும்பத்தை பத்தி தவறாக பேசியதாக காட்ட முயற்சித்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஓட்டே போடப்போவதில்லை
இதனால் அனிதாவை இந்த வாரம் வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அனிதாவுக்கு ஓட்டே போட போவதில்லை என்றும் கூறி வருகின்றனர். இதனால் அனிதா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

3 ஞாயிறுகள் மட்டுமே..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்குள் மூன்று ஞாயிற்றுக் கிழமைகள் மட்டுமே உள்ள நிலையில் வரும் வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications











