Just In
- 53 min ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 5 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
- 5 hrs ago
பிக்பாஸில் களைக்கட்டும் கள்ளக்காதல்.. புருஷன் வெளியே இருக்க இளைஞருடன் லூட்டியடிக்கும் பிரபல நடிகை!
- 6 hrs ago
ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் !
Don't Miss!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்போ இந்த வாரம் இவர்தானா.. நாமினேஷனில் இடம்பிடித்த 5 போட்டியாளர்கள்.. யார் யாருன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் 5 போட்டியாளர்கள் எவிக்ஷன் புராசஸுக்கு தேர்வாகியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது வாடிக்கை. அந்த வகையில் இன்றும் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.
இரண்டாவது முறையாக பிளாஸ்மா முன்பு ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவராய் வந்து தலா இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்தனர்.

லெஸ் காம்பிட்டிட்டிவ்
அதன்படி முதல் நபராய் வந்த ரம்யா, ஆஜித் மற்றும் கேபியை நாமினேட் செய்தார். இருவருமே லெஸ் காம்பிட்டிட்டிவ் என்று காரணம் கூறினார். அடுத்து வந்த ரியோ, முதல் நபராய் ரம்யாவை நாமினேட் செய்தார்.

மேக்ஸிமம் எஃபோர்ட்
மேலும் ரம்யா டஃப் காம்பிட்டிட்டர் என்பதால் அவரை நாமினேட் செய்வதாக கூறினார். அடுத்தாக ஷிவானியை நாமினேட் செய்த ரியோ, ஷிவானி தன்னுடைய ஃபேவரைட் கன்டெஸ்டென்ட் என்றும் இதுவரை அவர் தன்னுடைய மேக்ஸிமம் எஃபோர்ட்டை போடவில்லை என்றும் கூறினார்.

பொட்டென்ஷியல் இல்லை
அடுத்து வந்த சோம், ஆஜித் மற்றும் ஷிவானியை நாமினேட் செய்தார். இருவருமே போதுமான பொட்டென்ஷியலை காட்டவில்லை என்றும் கூறினார் சோம். அவரை தொடர்ந்து வந்த பாலாஜி, முதல் நபராய் சோமை நாமினேட் செய்தார்.

பிளண்டர் மிஸ்டேக்
லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது வேர் பிளண்டர் மிஸ்டேக் பண்ணியதாகவும் அதனால் மொத்த ஹவுஸ்மேட்ஸும் பாதிக்கக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் வைஸ் கேப்டனாக அவரை நியமித்தும் அதற்கான ரெஸ்பான்ஸ்பிளிட்டியை எடுக்கவில்லை என்றார்.

ஓப்பினியன் வைக்கல
தொடர்ந்து கேபியை நாமினேட் செய்த பாலாஜி, அவர் பாஸிட்டிவ் வைப் கொடுக்கிறார் என்பதையும் தாண்டி ஸ்ட்ராங்கான ஒப்பினியனை இதுவரை வைக்கவில்லை என்றும் காரணம் கூறினார்.

என்ன யோசிக்கிறாங்க?
அடுத்து வந்த கேபி, ஷிவானி மற்றும் ஆஜித் ஆகிய இரண்டு பேரையும் நாமினேட் செய்தார். தொடர்ந்து இருவரும் ஸ்ட்ராங் ஒப்பினியன் வைக்கவில்லை என்றும் அவர்கள் என்ன யோசிக்கிறாங்க என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

அந்த வார்த்தை பிடிக்கவில்லை
அடுத்து வந்த ஆஜித் முதலில் ரம்யா பெயரை நாமினேட் செய்தார். ரம்யா தன்னை லெஸ் காம்பிடிட்டிவ் என்று கூறிய வார்த்தை தனக்கு பிடிக்கவில்லை, அதனால் நாமினேட் செய்கிறேன் என்றார். அடுத்து சோமை நாமினேட் செய்த ஆஜித், அவர் சேஃப் கேம் விளையாடுவதாக கூறினார்.

லெஸ் இன்வால்வ்மென்ட்
அடுத்து வந்த ஷிவானி முதலில் கேபியை நாமினேட் செய்தார். அவர் சேஃப் கேம் விளையாடுவதாகவும் புரெடெக்ட்டிவ்வாக விளையாடுவதாகவும் கூறினார். இரண்டாவதாக ஆஜித்தை நாமினேட் செய்த ஷிவானி, லெஸ் இன்வால்வ்மென்ட் என்று கூறிவிட்டு சிரித்தப்படியே சென்றார்.

ஜட்ஜ்மெண்ட் பிடிக்கல
அவரை தொடர்ந்து வந்த ஆரி, ஷிவானி மற்றும் சோம சேகரை நாமினேட் செய்தார். அப்போது ஷிவானி இன்வால்வ்மென்ட்டை இன்னும் கொஞ்சம் அதிகரிக்க வேண்டும் என்றும் அவருடைய கருத்துக்கள் வெளிப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காஃபி டாஸ்க்கின் போது சோம் கொடுத்த ஜட்ஜ்மெண்ட் டிஸ்அப்பாயிண்டட் இருந்தது அதில் கிளாரிட்டி இல்லை என்றும் கூறினார் ஆரி.

5 பேர் லிஸ்ட்டில்
ஆரிதான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. இன்று நடைபெற்ற ஓபன் நாமினேஷன் மூலம் ஷிவானி, கேபி, ஆஜித், ரம்யா, சோம் ஆகிய 5 பேர் இடம் எவிக்ஷன் புராசஸில் இடம் பெற்றுள்ளனர்.

மூவரில் ஒருவர்..
ஆனால் தான் கடைசி நபராக சேவ் ஆவது வெறுப்பாய் இருப்பதாக அலுத்துக்கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வாரம் நீ தான் தம்பி வெளியே என்று நேற்றே சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். கூடவே ஆரி குறித்தும் புறணி பேசி வருவதால் இந்த வாரம் ஆஜித் வெளியேறுவார் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.