பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நாமினேஷன் ஆனவங்க இவங்கதான்.. எஸ்கேப்பான அந்த 4 பேர்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் 5 பேர் நாமினேஷன்ன லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Day • Eviction

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது கடந்த மூன்று சீசன்கள் முதலே வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெற்றது.

அதிக ஓட்டுகள்

அதிக ஓட்டுகள்

அதன்படி சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஆஜித் ஆகிய 5 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர். அவர்களில் ஆரியும் சுரேஷ் சக்கரவர்த்தியும் அதிக அளவாக தலா 9 ஓட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

அட்வைஸ் செய்கிறார்

அட்வைஸ் செய்கிறார்

சுரேஷ் சக்கரவர்த்தி கொளுத்தி போடுவதாகவும் அவர் இருந்தால் வீட்டில் அமைதி இருக்காது என்று கூறியும் அவரை சக ஹவுஸ்மேட்டுகள் நாமினேட் செய்தனர். இதேபோல் ஆரி எப்போதும் அட்வைஸ் செய்து கொண்டே இருப்பதாக கூறி அவரை நாமினேட் செய்தனர்.

எவிக்ஷன் ஃபிரி பாஸ்

எவிக்ஷன் ஃபிரி பாஸ்

அவரை தொடர்ந்து ஆஜித் 5 ஓட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தார். அவர் வைத்திருக்கும் எவிக்ஷன் ஃபிரி பாஸ் ஆபத்தானது என்றும் அதை அவர் சீக்கிரம் பயன்படுத்த வேண்டும் என்று கூறி அவரை நாமினேட் செய்தனர்.

பெரிதாக்குகிறார்

பெரிதாக்குகிறார்

அடுத்து அனிதா சம்பத் 4 ஓட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்தார். அனிதா சம்பத்துக்கு எல்லாத்துக்கும் கோபம் வருவதாகவும், எல்லா பிரச்சனையையும் பேசி பெரிதாக்குவதாகவும் காரணம் கூறி அவரை நாமினேட் செய்தனர்.

4 பேர் எஸ்கேப்

4 பேர் எஸ்கேப்

கடைசியாக பாலாஜி முருகதாஸ் இரண்டு ஓட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தார். இந்த வார நாமினேஷன் புராசஸில் இருந்து 4 பேர் தப்பித்தனர். ரியோ கேப்டன் என்பதாலும் அர்ச்சனா வந்து முதல் வாரம் என்பதாலும் அவர்கள் இருவரும் தப்பித்தனர்.

காரணத்தை சொன்ன பிக்பாஸ்

காரணத்தை சொன்ன பிக்பாஸ்

அவர்களை தொடர்ந்து வேல்முருகனும் சனம் ஷெட்டியும் கடந்த வாரம் நடைபெற்ற பால் டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் அவர்கள் இருவரும் நாமினேஷனில் இருந்து தப்பித்தனர். இதனிடையே முதல் முறையாக என்னென்ன காரணத்தை சொல்லி ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்தார்கள் என்பதையும் நச்சென போட்டுவிட்டார் பிக்பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X