twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்!

    மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை கைதி திரைப்படம் வெளியாகிறது.

    |

    Recommended Video

    பிகில் உடன் தீபாவளியில் மோதப்போகும் படங்கள்

    சென்னை: கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 25ம் தேதி வெளியாகிறது.

    குறைந்த பட்ஜெட்டில் மாநகரம் எனும் பிளாக்பஸ்டர் கொடுத்த லோகேஷ் கனகாராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    வரும் தீபாவளிக்கு கார்த்தியின் கைதி படத்தை பார்க்க முக்கியமான 5 காரணங்களை இங்கே காணலாம்.

    'பிகிலுடன் மோதும் கைதி.. பாக்ஸ் ஆபிஸ் பிரச்சினை'.. கார்த்தியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?'பிகிலுடன் மோதும் கைதி.. பாக்ஸ் ஆபிஸ் பிரச்சினை'.. கார்த்தியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

    அந்த தில் இருக்கே

    அந்த தில் இருக்கே

    180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக வரும் அக்டோபர் 25ம் தேதி கைதி படம் வெளியாகிறது என்ற ஒரு காரணமே போதும் கைதி படத்தின் கதை மற்றும் ஸ்க்ரீன் பிளே எந்த அளவுக்கு ஸ்ட்ராங்காக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், பிகிலுடன் கைதியை தயாரிப்பு தரப்பு மோதவிடும் என்பதை யோசித்து பாருங்கள்.

    தளபதி 64 இயக்குநர்

    தளபதி 64 இயக்குநர்

    மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி. ஒரு லாரி டிரைவர் போலீசிடம் ஒரு காரணத்திற்காக சிக்குவதும், பின்னர் அந்த போலீசுக்கு நேரும் பிரச்னையை தீர்க்க அவருக்காக துணை நிற்பதும் போன்ற டைட் ஸ்டோரி லைன்னுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

    அடுத்து விஜய்யின் ‘தளபதி 64' படத்தை இயக்கப்போகும் இயக்குநர் என்பதால், பிகில் பார்த்த கையுடன் கைதி படத்தையும் தளபதி ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெக்னிக்கலி ஸ்ட்ராங்க்

    டெக்னிக்கலி ஸ்ட்ராங்க்

    ஹீரோயின், ரொமாண்டிக், காமெடி போன்ற எந்த ஒரு மசாலாவும் இல்லாமல் ராவாக இந்த படம் உருவாகியுள்ளது. மொத்த படமும் ஒரே இரவில் நடப்பது போன்ற கதை பின்னணி கொண்டுள்ளதால், டெக்னிக்கல் ரீதியாகவும் படம் படு ஸ்ட்ராங்காக அமைந்துள்ளது. படத்தின் காட்சிகளுக்கு உயிர் ஊட்டும் விதமாக, எக்ஸ்ட்ரா லைட்டுகளை பயன்படுத்தாமல் லாரிகளில் உள்ள ஹெட்லைட்டுகளை பயன்படுத்தியே காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.

    பிகில் குழப்பம்

    பிகில் குழப்பம்

    பிகில் படத்திற்கு வரும் தொடர் சிக்கல்களால் சொன்ன நேரத்திற்கு படம் வெளியாகுமா என்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதனால், கைதி படத்திற்கு டிக்கெட்டுகளை புக் செய்ய மக்கள் தொடங்கியுள்ளனர். தீபாவளிக்கு குடும்பத்துடன் கைதி படத்தை பார்க்க, அந்த படத்தில் அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள பாச போராட்ட காட்சிகள் நிச்சயம் பெரிய வரவேற்பை பெறும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

    நேர்த்தியான கார்த்தி

    நேர்த்தியான கார்த்தி

    பருத்தி வீரன், தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் தனது ஆழமான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கார்த்தி, கைதி படத்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் தனது 100 சதவீத நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்பது தான். தனுஷின் அசுரன் படத்தை தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு அற்புத படைப்பாக கார்த்தியின் கைதி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Karthi’s powerful performance and Lokesh Kanagaraj’s immense directing will make Kaithi a very engaging movie for this Diwali. Surely Kaithi movie will be the strong opponent for Vijay’s Bigil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X