»   »  ஆறுசாமி, ஹரி, விக்ரம்: சாமி 2 பார்க்க இன்னும் நிறைய காரணம் இருக்கு

ஆறுசாமி, ஹரி, விக்ரம்: சாமி 2 பார்க்க இன்னும் நிறைய காரணம் இருக்கு

Subscribe to Oneindia Tamil
சாமி 2 பார்க்க நிறைய காரணம் இருக்கு...வீடியோ

சென்னை: சாமி 2 திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை பார்ப்பதற்கான முக்கிய காரணங்களை தெரிந்துகொள்வோம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

எத்தனையோ வெற்றிப்படங்கள் இரண்டாம் பாகம் வரும்போது சாமி வரவில்லையே என்று ஏக்கத்திலிருந்த ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் இப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

ஹரி

ஹரி

இயக்குனர் ஹரியுடன் விக்ரம் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார். அருள் திரைப்படத்திற்கு பிறகு விக்ரமுடன் பணியாற்றியுள்ளார் ஹரி. பொதுவாக இயக்குனர் ஹரியின் படங்கள் ஃபாஸ்ட் பார்வட் செய்யப்பட்டது போல் பயங்கர வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். அதுவும் போலீஸ் கதை என்றால் சொல்லத் தேவையில்லை. சாமி, சிங்கம் படங்களில் பார்த்ததை விட இரண்டு மடங்கு மெனக்கெட்டுள்ளார்.

டீசர்

டீசர்

சாமி 2 திரைப்படத்தின் டீசர், ட்ரெயிலர் என இரண்டுமே பயங்கர மிரட்டலோடு இருந்தது. நான் பூதம் என்று சொல்லும்போதே ஆறுச்சாமியின் வேகம் என்னவாக இருக்குமென கணிக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சாமி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம். ஆக்‌ஷன், பன்ச் வசனங்கள் என எல்லா விஷயங்களிலும் படம் பேசப்பட்டது. தற்போது ரிலீஸாகியுள்ள சாமி 2 திரைப்படம் பழைய சாமி திரைப்படத்தின் சாராம்சம் குறையாமல் இருக்கும் என்பதால் நிச்சயம் வெற்றிபடமாக அமையும்.

போலீஸ்

போலீஸ்

ஆறுச்சாமி என்ற கம்பீரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. நான் போலீஸ் இல்ல பொறுக்கி, என ஆரம்பித்து திருநெல்வேலி நகரின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, வில்லன் பெருமாள் பிச்சைக்கு சவால் விடுவது என பல விஷயங்களில் தமிழ் சினிமாவில் நன்கு பாராட்டப்பட்ட கதாப்பாத்திரம் இந்த ஆறுச்சாமி. அவர் மீண்டும் வருகிறார் என்பது மிகச் சிறப்பான விஷயம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

சாமி 2 என்பதால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் வகையில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆறுச்சாமியின் மனைவியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜிகர்தண்டா படத்தில் சேதுவாக மிரட்டிய பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, ஜான் விஜய், டெல்லி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.

பாடகி கீர்த்தி

பாடகி கீர்த்தி

விக்ரம் ஏற்கனவே பாடகராக அறிமுகமாகியிருந்தாலும் இப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷும் சேர்ந்து பாடியுள்ளார். அவர்கள் பாடிய புது மெட்ரோ ரயில் ஹிட் அடித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் ஹரி படம் சாமி 2. அதனால், ஹரியின் திரைக்கதை வேகத்தை ஈடுகொடுக்கும் வகையில் இப்படத்தின் பின்னணி இசை இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Five important reasons to watch Samy 2 movie.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more