ஜெயம் ரவியின் ‘அகிலன்’ இன்று ரிலீஸ்.. இந்த 5 காரணத்திற்காக படத்தை பார்க்கலாம்!
சென்னை : ஜெயம் ரவி நடித்த அகிலன் திரைப்படம் மார்ச் 10ந் தேதியான இன்று 500க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்னனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி திரைப்படம் என்பதால், இந்த படத்தைக்காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த 5 முக்கியமாக காரணத்திற்காக அகிலன் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன்
ஜெயம் ரவியுடன் இணைந்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் மீண்டும் அகிலன் படத்தில் அவருடன் இணைந்துள்ளார். ஹார்பரில் நடக்கும் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடக்கூடிய அகிலன் படம் இயக்குனரின் ரேசி த்ரில்லர் திரைப்படமாக உள்ளது.

நெகடிவ் ரோலில்
அகிலன் படத்தில் நாம் இதுவரை பார்த்திராத வேறு ஒருவிதமான நெகடிவ் ரோலில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இதுவரை காதல் இளவரசனாக வலம் வந்த ஜெயம்ரவி, துறைமுக சண்டைக்குள் கெட்டவார்த்தை பேசி இறங்கி ஆடி உள்ளார். இது ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒன்றாக இருக்கும். வலிமையான கேரக்டரில் நடிக்கும் ஜெயம் ரவி, படத்தில் யாரை எதிர்த்து நிற்க போகிறார் என்பது அகிலன் படத்தின் அடுத்த சுவாரஸ்யமாக உள்ளது.

பிரியா பவானி சங்கர்
மாஃபியா படத்தில் காவல்துறை அதிகாரியாக வந்த பிரியா பவானி சங்கர், அகிலன் படத்தில் போலீஸ் உடையில் வந்து மிரட்டி உள்ளார். டிரைலரில் அவரின் நடை உடை சும்மா மிரட்டலாக இருக்கிறது. மற்றொரு நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இரு வேறு துருவங்களில் நிற்கிறார்கள்.

எதிர்பாராத பல திருப்பங்கள்
அகிலன் படத்தில் ஜெயம்ரவி இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இயக்குநர் இதுவரை நடிகரின் இரண்டாவது தோற்றத்தையோ அல்லது கதாபாத்திரத்தையோ இன்னும் இணைக்கவில்லை, ஆனால், ரசிகர்களை யூகித்துவிட்டார்கள். மேலும்,அகிலன் படம் பல திருப்பங்களை கொண்டுள்ளது.

மிரட்டும் பின்னணி இசை
இப்படத்திற்கு சாம் சிஎஸ் வித்தியாசமான பாடல்களை வழங்கியுள்ளார். சுறுசுறுப்பான இசையமைப்பாளர் பின்னணி இசையில் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், சாம் சிஎஸ் நிச்சயம் பின்னணி இசையில் ஸ்கோர் செய்வார். இன்று வெளியாகி உள்ள இந்த படத்திற்கு இன்னும் டிக்கெட் புக் செய்யவில்லை என்றால், அவசியம் புக் செய்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications











