ஹாலிவுட், இந்திய சினிமாக்கள் கற்றுத் தரும் 5 அடேங்கப்பா விஷயங்கள்

By Siva

சென்னை: அமெரிக்க படங்கள் மற்றும் இந்திய படங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கும் 5 விஷயங்கள் என்று கூறி ஒரு தகவல் வாட்ஸ்ஆப்பில் உலா வருகிறது.

அமெரிக்க படங்களுக்கும், இந்திய படங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஹாலிவுட் படங்களில் இருந்து சில இல்லை பல சமயம் கதை, காட்சிகள் சுடப்படுவதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

பாடம்

பாடம்

அமெரிக்க படங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கும் 5 விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆசிரியர் வேலை செய்வது அல்லது குங்பூ செய்வது தான் சீனர்களின் வேலை. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் எப்.பி.ஐ/சிஏஏ ஏஜெண்டுகளாக அதுவும் அன்டர்கவரில் இருப்பார்கள்.

ஏலியன்

ஏலியன்

அமெரிக்க பள்ளிகளின் முக்கிய நோக்கமே கூடைப்படந்து அல்லது பேஸ்பால் விளையாட்டை விளம்பரம் செய்வது தான். ஏலியன்களுக்கு அமெரிக்காவை தாக்கத் தான் பிடிக்கும். வாம்பையர் உள்ளிட்ட வித்தியாசமானவற்றை அமெரிக்காவில் மட்டுமே பார்க்க முடியும். இது அமெரிக்க படங்கள் கற்றுத் தரும் பாடங்கள்.

இரட்டையர்கள்

இரட்டையர்கள்

இரட்டையர்களில் ஒருவர் கண்டிப்பாக கெட்டவராக இருப்பார். வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும்போது எந்த வயரை கட் செய்தாலும் அது வெடிக்காது. ஏன் என்றால் ஹீரோ எந்த வயரை கட் செய்கிறாரோ அது தான் சரியான வயர். இது இந்திய படங்கள் கற்றுத் தரும் பாடங்களில் சில.

காயம்

காயம்

வில்லன் அடித்து நொறுக்கும்போது ஹீரோவுக்கு வலிக்கவே வலிக்காது. ரத்தம் கொட்டினாலும் தில்லாக இருப்பார். ஆனால் ஒரு பெண் அந்த காயத்தை லேசாகத் தொட்டால் போதும் வலியால் துடியாய் துடிப்பார்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

ஒரு துப்பறிவாளன் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகே அந்த வழக்கு பிரச்சனையை கண்டுபிடிப்பார். தெருவில் நடனமாட முடிவு செய்துவிட்டால் அந்த வழியாக வருவோர், போவோர் எல்லோரும் சொல்லி வைத்தது போன்று ஒரே மாதிரி ஸ்டெப்ஸ் போடுவார்கள். இது இந்திய படங்கள் கற்றுத் தரும் பாடங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X