ட்விட்டரில் ட்ரெண்டான #5YearsOfTheri.. படக்குழுவுக்கு நன்றி சொன்ன அட்லீ

சென்னை: விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா உள்ளிட்டோர் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான படம் தெறி.

அட்லீ இயக்கிய இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். கலைப்புலி S. தாணு தயாரித்திருந்தார்.

ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்த படம் வெளியாகி நேற்றோடு 5 வருடம் நிறைவடைந்தது. அதை நினைவு கூறும் வகையில் படக்குழுவினருக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்தார் அட்லீ.

திருப்புமுனையாக அமைந்தது

திருப்புமுனையாக அமைந்தது

தளபதி விஜய்க்கு புலி படத்தின் தோல்வியில் இருந்து மீள தெறி படம் பெரிதும் உதவியது. அப்போது ராஜா ராணி படத்தை மட்டும் இயக்கிய இளம் இயக்குனரான அட்லீக்கு வாய்ப்பளித்து தெறி படத்தின் வெற்றிக்கு விஜய் முக்கிய பங்கு வகித்தார். தெறி படப்பிடிப்பின் போது விஜயுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தனது அன்பை பகிர்ந்துள்ளார் இயக்குனர் அட்லீ.

ஆதரவிற்கு நன்றி

ஆதரவிற்கு நன்றி

தெறி படத்தின் நாயகி சமந்தாவிற்கும் நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார் அட்லீ. தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகாவை பற்றியும் ட்வீட் பதிவிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தந்த நடிகை மீனாவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார் அட்லீ.

வருத்தம் தெரிவித்தார்

வருத்தம் தெரிவித்தார்

பிரபல இயக்குனர் மகேந்திரன் தெறி படத்தின் மூலம் முதல் முறையாக வில்லனாக அறிமுகமானார். மகேந்திரனின் கதாபாத்திரம் நல்ல ஆதரவை பெற்றது. மகேந்திரன் உடனான புகைப்படத்தை பதிவிட்டு, அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக நன்றியும், அவரை இழந்ததால் வருத்தமும் தெரிவித்துள்ளார் அட்லீ.

நன்றி தெரிவித்தார்

நன்றி தெரிவித்தார்

தெறி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணுவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மற்ற தெறி படத்தின் படக்குழுவினருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார் அட்லீ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X