twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சம் பிளாஷ்பேக்: விஜய்யின் 'குஷி'யில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவர்தான்.. ஆச்சரியப்படாதீங்க!

    By
    |

    சென்னை: விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான குஷி படம், அவருக்காக எழுதப்பட்ட கதை இல்லை என்கிறார்கள் சினிமாவில்.

    Recommended Video

    V-CONNECT | ACTOR MATHI ALAGAN | 30 வருஷ நடிகன்- விஜய் டிவி முதல் பென்குயின் வரை | FILMIBEAT TAMIL

    சினிமா அப்படித்தான். இது இப்படி நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அது வேறொன்றாக வந்து நிற்கும்.

    சில நேரங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டம், எல்லை தாண்டி வந்து ஹாய் சொல்லும். அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அவமானங்கள் வந்து கதவைத் தட்டும்.

    நல்லா வாய்ல வருது.. சாக்கடைங்க.. மகளுக்கு அட்வைஸ் கூறியவர்களை கிழித்து தொங்கவிட்ட வனிதா!நல்லா வாய்ல வருது.. சாக்கடைங்க.. மகளுக்கு அட்வைஸ் கூறியவர்களை கிழித்து தொங்கவிட்ட வனிதா!

    நினைத்தபடி

    நினைத்தபடி

    இதுதான் வாழ்க்கையும் கூட. நினைத்தபடியே எல்லாம் நடந்துவிடுமா என்ன? இப்படி சினிமாவில் உல்டாவாக மாறிய பல படங்கள் உண்டு. டைரக்டர், ஒரு ஹீரோவை மனதில் வைத்து கதையை உருவாக்கி இருந்தால், அந்த கதை வேறொரு ஹீரோவுக்குச் சென்றிருக்கும். அது ஹிட்டாகி இருக்கலாம். ஆகாமலும் போயிருக்கலாம். புதுமுகங்களுக்கு உருவாக்கிய கதை, பெரிய ஹீரோ நடிப்பிலும் வந்திருக்கும்.

    விஜய், ஜோதிகாவின் குஷி

    விஜய், ஜோதிகாவின் குஷி

    அப்படி ஒரு சம்பவம், சூப்பர் ஹிட் படமான 'குஷி'க்கும் நடந்திருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக் உட்பட பலர் நடித்த படம், குஷி. தேவா இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு ஜீவா ஒளிப்பதிவு செய்திருந்தார். பொதுவாக 'கதையை வெளியில சொல்லமாட்டேன்' என்கிற இயக்குனர்களுக்கு மத்தியில், இதுதான் கதை, எப்படி முடியுதுன்னு பாருங்க, என்று ஆரம்பத்திலேயே எஸ்.ஜே.சூர்யா கதையை விளக்கி இருப்பார் படத்தில்.

    நிக் ஆர்ட்ஸ்

    நிக் ஆர்ட்ஸ்

    தாளம் போட வைக்கும் பாடல்களும், கண்களில் ஒற்றிக் கொள்ளும்படியான ஒளிப்பதிவும் இந்த படத்துக்கு பிளஸ். இது எஸ்.ஜே.சூர்யாவுக்கு இரண்டாவது படம். ஆனால், முதல்படமாக வந்திருக்க வேண்டிய கதை! அப்போது, அஜித்தின் 'ராசி' படம் ரிலீஸ் ஆகி, சுமாரான வெற்றியை பெற்றிருந்த நேரம். எஸ்.ஜே.சூர்யா, 'வாலி' கதையை அஜித்துக்குச் சொல்லி இருந்தார். படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரிக்க இருந்தது.

    இயக்குனர் பாரதிராஜா

    இயக்குனர் பாரதிராஜா

    'ராசி' சுமார் ஹிட் என்பதால், தயாரிப்பாளரால் 'வாலி'யை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. தள்ளிக்கொண்டே போனது. இதற்கு முன்பு, எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் பாரதிராஜாவிடம் கதை ஒன்றைச் சொல்லி இருந்தார். அவர் மகன் மனோஜ் ஹீரோவாக நடிப்பதற்காகச் சொல்லப்பட்ட கதை அது. பாரதிராஜா, தனது மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்து இயக்குவதாக இருந்தார். அந்த கதைதான், குஷி!

    கடிதம் எழுதினார்

    கடிதம் எழுதினார்

    'வாலி' தள்ளிக்கொண்டே போனதால், பாரதிராஜா அழைத்தார் எஸ்.ஜே.சூர்யாவை. ஆனால், 'என்னை மதித்து கதை கேட்டு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் அஜித். எவ்வளவு லேட் ஆனாலும் இந்தப் படத்தை முடித்துவிட்டு வருவேன்' என்று பாரதிராஜாவுக்கு டச்சிங்காக கடிதம் எழுதினார் எஸ்.ஜே.சூர்யா. பிறகு பாரதிராஜா, மனோஜ் நடிப்பில் 'தாஜ்மஹாலை' தொடங்கினார். எஸ்.ஜே.சூர்யா 'வாலி'யை இயக்கினர். படம் ஹிட். அடுத்து 'குஷி'யை விஜய் நடிப்பில் இயக்கி, அந்தப் படம் சூப்பர் ஹிட்டான கதைதான் தெரியுமே!

    English summary
    Flashback: 'kushi' film story is not written for Vijay
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X