கொஞ்சம் பிளாஷ்பேக்.. போதையில் வந்த ஹீரோ.. சத்தம் போடாமல் எஸ்கேப் ஆன ஹீரோயின்.. முற்றிய மோதல்!

By

சென்னை: படப்பிடிப்புக்கு மது அருந்தியபடி ஹீரோ வந்ததால், ஹீரோயின் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சம்பவம் அந்த காலகட்டத்திலேயே நடந்திருக்கிறது.

சினிமாவில் கொடிகட்டி பறந்தார்கள் என்பார்களே, அதற்கு நிஜமான உதாரணமாக பி.யு. சின்னப்பாவை சொல்லலாம்.

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா என்பதுதான் பி.யு.சின்னப்பாவின் முழுப்பெயர்.

வீடுகளாக வாங்கி

வீடுகளாக வாங்கி

சினிமாவில் சம்பாதித்த பணத்தை வீணாக்காமல், புத்திசாலித்தனமாக சொத்துக்களில் முதலீடு செய்தவர் இவர். சொந்த ஊரான புதுக்கோட்டையில் வீடுகளாக வாங்கிக் குவித்தார். அங்கு எங்கு சென்று பார்த்தாலும் அருகில் இருப்பதை, இது பி.யு.சின்னப்பா வீடு என்பார்கள் கேஷூவலாக. அந்தளவுக்கு வீடுகளாக வாங்கி குவித்தவர்.

தடை விதிப்பு

தடை விதிப்பு

இதுபற்றி ஒரு தகவல் கூட உண்டு. சின்னப்பா வீடுகளாக வாங்கிக் குவிப்பது பற்றிய தகவல் புதுக்கோட்டை மன்னருக்குச் செல்ல, இனி புதுகோட்டையில் அவர் வீடு வாங்கக் கூடாது என்று அவருக்கு தடை விதித்ததாகக் கூடச் சொல்வார்கள். அந்தளவுக்கு சொத்துக்களின் மீது ஆர்வம் கொண்டவர். பிறகு சென்னையில் வீடுகள் வாங்கினார் என்பார்கள்.

மது பழக்கம்

மது பழக்கம்

அந்த கால கட்டத்து டாப் ஹீரோவான பி.யு. சின்னப்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அப்போது சினிமாவில் இது எல்லோருக்கும் தெரியும். சில நேரங்களில் படப்பிடிப்புக்கும் அவர் மது அருந்தி கொண்டு வருவது உண்டு. இந்தப் பழக்கம் காரணமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பெரிய பிரச்னையே நடந்திருக்கிறது.

பானுமதி ஹீரோயின்

பானுமதி ஹீரோயின்

அப்போது ரத்னகுமார் (1949) என்ற படத்தில் நடித்து வந்தார் சின்னப்பா. பானுமதி ஹீரோயின். எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினர். இதன் ஷூட்டிங்கிற்கு போதையில் வந்துவிட்டார் சின்னப்பா. இது பானுமதிக்கு தெரிந்ததும் சத்தம் போடாமல் வீட்டுக்கு சென்றுவிட்டார், யாரிடமும் சொல்லாமல்.

முடியும்வரை

முடியும்வரை

பிறகு பானுமதியின் கணவர், படக் குழுவினர் இந்தப் பிரச்னையை பேசி தீர்த்தனர். செட்டுக்கு குடித்துவிட்டு வரமாட்டேன் என்று உறுதிக் கொடுத்தாராம் சின்னப்பா. இதையடுத்து ஷூட்டிங் தொடர்ந்தது. ஷூட்டிங் முடியும்வரை கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார் சின்னப்பா. பீடி கூட குடிக்கவில்லை.

விமானத்தில் விளம்பரம்

விமானத்தில் விளம்பரம்

இந்த 'ரத்னகுமார்' படத்துக்காக, மதுரையில் விமானத்தில் இருந்து இதன் விளம்பர நோட்டீஸ்களை வீசினார்கள், அந்த காலத்திலேயே. இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் சரியாக ஓடவில்லை. பி.யு.சின்னப்பா தனது 35 வது வயதில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X