கொஞ்சம் பிளாஷ்பேக்: மூத்த நடிகை சச்சு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதற்கு இதுதான் காரணம்!

By

சென்னை: மூத்த நடிகை சச்சு, திருமணமே செய்துகொள்ளாததற்கு என்ன காரணம் என்று அவரே தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் திருமணமே செய்துகொள்ளாமல் வாழும் சில நடிகைகளில் ஒருவர் சச்சு.

'குமாரி சச்சு' என தனது 4 வயதிலேயே, ராணி என்ற படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்.

மாயா பஜார்

மாயா பஜார்

பிறகு, கதாநாயகி, குணசித்திரம், காமெடி நடிகை என பல கேரக்டர்களில் நடித்தவர். நடித்துக் கொண்டிருப்பவர். டிவி சீரியல்களிலும் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் சுமார் 500 படங்கள் வரை நடித்திருக்கும் சச்சு, காதல் ஜோதி, சொர்க்கவாசல், மாயா பஜார் உள்பட சுமார் 50 படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருக்கிறார்.

கிருஷ்ணன்- பஞ்சு

கிருஷ்ணன்- பஞ்சு

பிறகு சினிமாவில் கொஞ்சம் கேப். வயதானதும் ஹீரோயினாக நடிப்பதா, குழந்தை நட்சத்திரமாக நடிப்பதா என்பதில் குழப்பம். சில படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு தங்கையாக நடித்தார். பிறகு அவர் ஹீரோயினாக அறிமுகமான படம், அன்னை. கிருஷ்ணன்- பஞ்சு இயக்கிய இந்தப் படத்துக்கு பிறகு ஏவி.எம்மில் மாத சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தார் சச்சு.

யோசித்தார்கள்

யோசித்தார்கள்

சச்சு ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில், சரோஜாதேவி, பத்மினி, ஜெயலலிதா என பலர் ஹீரோயின்களாக நடித்துக் கொண்டிருந்தனர். சிறுவயதில் இருந்தே சச்சுவை பார்த்து வருவதால், எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி உள்பட அப்போதைய ஹீரோக்கள், அவரைத் தங்களுக்கு ஹீரோயினாக்க யோசித்தார்கள்.

காதலிக்க நேரமில்லை

காதலிக்க நேரமில்லை

அப்போதுதான் ஶ்ரீதர், காதலிக்க நேரமில்லை படத்தை ஆரம்பித்தார். எல்லோருமே புதுமுகங்கள். படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. சச்சுவை அந்தப் படத்தில் நாகேஷூக்கு ஜோடியாக நடிக்க வைக்கக் கேட்டார் ஶ்ரீதர். சரி என்று டிராக் மாறினார் சச்சு. குழந்தை நட்சத்திரம், ஹீரோயின் என சென்று கொண்டிருந்த அவர் வாழ்க்கை, காமெடிக்கு வந்தது இந்த படத்தில் இருந்ததுதான்.

நாகேஷ், தங்கவேலு

நாகேஷ், தங்கவேலு

பிறகு காமெடியில் கலக்கினார் சச்சு. நிறைய வாய்ப்புகள். நாகேஷ், தங்கவேலு, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி என அப்போதைய முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்தார் சச்சு. நாகேஷுடன் மட்டும் 50 படங்களில் நடித்திருக்கிறார். சச்சுவுடன் நடித்த பல ஹீரோயின்கள் சினிமாவை விட்டு சென்றுவிட்டபோதும் நடித்துக் கொண்டிருக்கிறார் சச்சு.

கல்யாணமே பண்ணிக்கலை

கல்யாணமே பண்ணிக்கலை

ஆனால், அவர் கடைசிவரை கல்யாணமே செய்து கொள்ளவில்லை. இதுபற்றி அவரே சொன்னார் ஒரு பேட்டியில்: 'என் கூட பிறந்தவங்க நிறைய பேர். அவங்களோட வாரிசுகள் அதிகம். சிலர் நல்லா இருக்காங்க. சிலர் சிரமப்படறாங்க. எல்லோரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்னு நினைச்சேன். அதனாலதான் கல்யாணமே பண்ணிக்கலை' என்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X